| 78 |
கொன்வளர்
தருக்கிற் பொங்குங்
குணத்தவன்
பினர்தன் சாயற்
பொன்வள ருருவ மாக்கிப்
பூண்வளர்
சிறப்பின் மண்ணிப்
பின்வள ரிழிவெண் ணாத
பேதைமைத்
திறத்த தொன்றை
மன்வளர் தேவ னாக
வணங்கவென்
றேவி னானே. |
| |
தொன் வளர்
தருக்கில் பொங்கும் குணத்து, அவன் பினர் தன் சாயல்
பொன் வளர் உருவம் ஆக்கி, பூண் வளர் சிறப்பின் மண்ணி,
பின் வளர் இழிவு எண்ணாத பேதைமைத் திறத்து, அது ஒன்றை
மன் வளர் தேவனாக வணங்க என்று ஏவினானே. |
அவன்
வீணே வளர்ந்த அகந்தையினால் உள்ளத்தில் ஓங்கிய
ஆணவ குணத்தால், அதன்பின் தன் சாயலாக உயர்ந்த ஓர் உருவத்தைப்
பொன்னால் செய்து. உயர்ந்த சிறப்போடு அணிகலன்களால் அழகு
செய்தான்; அதனால் பின் வளரும் இழிவை எண்ணாத அறியாமையின்
காரணமாக, அவ்விருவம் ஒன்றையே என்றும்நிலைபெற்று வளரும்
தெய்வமாக வணங்க வேண்டுமென்று அனைவரையும் ஏவினான்.
| 79 |
சீர்தங்கும்
வயத்தொன் றாமெந்
தேவனை
யன்றி மற்ற
வேர்தங்கு முருவத் தேவ
ரிறைஞ்சிலே
மென்ன மூவர்
கார்தங்கு மிடியிற் காய்ந்தோன்
கடுகியவ்
வியூதர் தம்மைப்
பீர்தங்கு முருத்தீச் சூளை
பெய்மினீன்ண்
டென்றா மாதோ. |
|