| 81 |
அந்நிலை
கேட்ட மன்ன
னதிசயித்
தணுகி நோக்க
வெந்நிலைச் சூளை நால்வர்
மெலிவற
வுவப்பக் கண்டே
யிந்நிலை வியப்பிற் பொங்கி
யீண்டிவண்
வம்மி னென்னப்
பைந்நிலை மலரின் மூவர்
பனிமுகத்
தெய்தி நின்றார். |
| |
அந்நிலை கேட்ட
மன்னன் அதிசயித்து அணுகி நோக்க,
வெந்நிலைச் சூளை நால்வர் மெலிவு அற உவப்பக் கண்டே,
இந்நிலை வியப்பில் பொங்கி, "ஈண்டு இவண் வம்மின்!" என்ன,
பைந்நிலை மலரின் மூவர் பனி முகத்து எய்தி நின்றார். |
அந்நிலைமையைக்
கேட்டறிந்த மன்னன் வியந்து அருகில் வந்து
உள்ளே பார்த்தான்; வெப்பமான சூளையில் நாலுபேர் மெலிவில்லாமல்
மகிழ்ந்திருக்கக் கண்டான்; இந்நிலைமையால் மேலும் வியப்பு மிக
"இப்பொழுதே இங்கு வாருங்கள்!" என்றான். பசுமை நிலையிலுள்ள
மலர்போல் மூவர் மட்டுமே குளிர்ந்த முகத்தோடு அவன் பக்கம் வந்து
நின்றனர்.
| 82 |
நால்வருங்
கண்டேன் மற்றோர்
நவியனெங்
கென்ன வன்னார்
மேல்வருந் திறத்தெந் தேவன்
விட்டவிண்
ணவன்றா னென்றார்
போல்வரு மின்றி யூதர்
போற்றிய
கடவுள் மாண்பு
நூல்வரு முறையின் சால்பு
நோக்கினன்
மருளு நீக்கான். |
| |
"நால்வரும் கண்டேன்;
மற்று ஓர் நவியன் எங்கு?" என்ன, அன்னார்,
"மேல் வரும் திறத்து எம் தேவன் விட்ட விண்ணவன் தான்" என்றார்.
போல்வரும் இன்றி, யூதர் போற்றிய கடவுள் மாண்பும்,
நூல் வரு முறையின் சால்பும் நோக்கினன்; மருளும் நீக்கான். |
|