|
நபூக்கன்,
"நாலு பேரை அங்குக் கண்டேனே; மற்றும் அந்தப்
புதியவன் எங்கே?" என்றான். அவர்கள், "எவரினும் மேம்பட்ட
வல்லமையுள்ள எம் ஆண்டவன் அனுப்பி வைத்த வானவன்தான் அவன்"
என்றனர். தனக்கு ஒப்பாவாரே இல்லாது, யூதர்கள் போற்றி வணங்கிய
கடவுளின் மாண்பும், அவர்கள் வேத நூலிற் காணும் செய்திகளின்
மேன்மையும் மன்னன் ஆராய்ந்து பார்த்தான்; ஆயினும், தன் மயக்கத்தை
நீக்கிக் கொள்ளாதவன் ஆயினான்.
'நவ்வியன்
என்ற சொல் இடைக்குறையாய் நின்றது.
| 83 |
தன்றிறத்
தூக்கித் தேவன்
றானென
வுணர்ந்த பாலாற்
பின்றிறத் தெவரு மஞ்சப்
பெருஞ்சினத்
தன்ன தேவன்
மன்றிறத் துயிரே மாறா
மாவுருக்
கொளீஇத் தள்ளுண்டு
கொன்றிறத் தெஞ்சிக் காவிற்
குனிந்துபுன்
மேய்ந்து நின்றான். |
| |
தன் திறத்து
ஊக்கி, தெய்வம் தான் என உணர்ந்த பாலால்
பின் திறத்து எவரும் அஞ்சப் பெருஞ் சினத்து அன்ன தேவன்,
மன் திறத்து, உயிரே மாறா, மா உருக் கொளீஇ, தள்ளுண்டு,
கொன் திறத்து எஞ்சி, காவில் குனிந்து புல் மேய்ந்து நின்றான். |
நபூக்கன்
தன் திறமை காரணமாக ஊக்கம் கொண்டு, தானே
தெய்வமென்று கருதிய தன்மையால், பின் நாளில் திறமை கொண்டுள்ள
யாவரும் அஞ்சுமாறு அதே ஆண்டவன் தன் பெருஞ்சினத்தால், தனது
நிலை பெற்ற வல்லமையைக் கொண்டு, அவனது உயிர் நீங்காமல், விலங்கு
உருவம் கொள்ளச் செய்தான். அதனால், நபூக்கன் நாட்டினின்று
தள்ளப்பட்டு, தன் வீணான திறமையில் குறைந்து, காட்டில் குனிந்து புல்
மேய்த்து நின்றான்.
'மா
உரு' எனப் பொதுப்படச் சொல்லியிருப்பினும், காளை உரு
என்பதை விவிலியம் கண்டு தெளிக.
|