நாட்டன்னார்
வெருவி நைய
நண்ணியெண்
ணிலகொல் வேங்கைக்
கூட்டன்னா ரபயர் சூழக்
கோயிலை
விரைவிற் புக்கான். |
| |
மீட்டு, அன்னார்
இறைஞ்சும் கோயில் மிக்கு அருந்திரு உண்டு என்னக்
கேட்டு, அந்நாட்டு அரசன் ஏவ, எல்லியோதுரன் போய், கேழ்த்த
நாட்டு அன்னார் வெருவி நைய நண்ணி, எண் இல கொல் வேங்கைக்
கூட்டு அன்னார் அபயர் சூழக் கோயிலை விரைவின் புக்கான். |
மேலும்,
அவ்யூதர் வணங்கும் கோவிலில் அரிய செல்வம் மிகுதியாக
உண்டு என்று அந்நாட்டு அரசன் கேள்விப்பட்டு, எல்லியோதுரன்
என்பவனை ஏவினான். எல்லியோதுரன் புறப்பட்டுப் போய், ஒளிமிக்க
அந்நாட்டு மக்கள் அஞ்சி வருந்துமாறு வந்தடைந்து, கொல்லும் வேங்கைக்
கூட்டம் போன்று எண்ணில்லாத வீரர் புடைசூழ விரைந்து கோவிலுக்குள்
புகுந்தான்.
இங்குக்
குறித்த அரசன் செவ்யூக்கஸ் என்னும் பெயரினன்.
| 86 |
புக்கன வளவில்
வானிற்
பொற்பரத்
தொருவ னேறு
மிக்கன சினக்கொக் கன்னான்
வியன்றமார்
புதைத்து வீழ்த்தத்
தொக்கன வெவரு மோடச்
சூழிழு
வானோர் தோன்றி
நக்கன கதத்தன் னானை
நண்ணிமத்
திகையாற் பெய்தார். |
| |
புக்கன அளவில்,
வானில் பொன் பரத்து ஒருவன் ஏறு
மிக்கன சினக் கொக்கு, அன்னான் வியன்ற மார்பு உதைத்து வீழ்த்த,
தொக்கன எவரும் ஓட, சூழ் இரு வானோர் தோன்றி,
நக்கன கதத்து அன்னானை நண்ணி, மத்திகையால் பெய்தார். |
|