|
எல்லியோதுரன்
கோவிலுக்குள் புகுந்த அளவில், வானத்தில்
பொற்கவசம் அணிந்த ஒருவன் ஏறி வந்த மிக்க சினங்கொண்ட குதிரை,
அவனது பரந்த மார்பில் உதைத்து அவனை வீழ்த்தியது. அது கண்டு
கூட்டமாய் வந்த வீரர் யாவரும் ஓடிப்போயினர். அப்பொழுது இரண்டு
வானவர் அவனைச் சூழ வந்து தோன்றி, எள்ளி நகைத்த சினத்தோடு
அவனை அணுகி, குதிரைச் சம்மட்டியால் அவன்மீது அடிகளைப்
பொழிந்தனர். 'புக்கன' முதலாக அடிதோறும் முதற்கண் நின்ற
பெயரெச்சங்கள் இடையே 'அன்' சாரியை பெற்று வந்தன.
| 87 |
ஈறுயி ராக
நிற்ப
வினைந்திருங்
குரவன் வேண்டி
வீறுயி ராகத் தேற்றி
விண்ணவ
ரிருவ ரிவ்வாய்த்
தேறுயி ரிறைவன் வாழ்த்தத்
திசையெலா
முணர்த்தி யென்ன
வூறுயி ருய்ந்து வாழ்நா
ளூள்ளள
வேத்தினானே. |
| |
ஈறு உயிர் ஆக
நிற்ப, இனைந்து இருங்குரவன் வேண்டி,
வீறு உயிர் ஆகத் தேற்றி, விண்ணவர் இருவர், "இவ் வாய்த்
தேறு உயிர் இறைவன் வாழ்த்தத்திசை எலாம் உணர்த்தி" என்ன,
ஊறு உயிர் உய்ந்து வாழ்நாள் உள் அளவு ஏத்தினானே. |
அதனால்
எல்லியோதுரன் தன் உயிருக்கு இறுதி நேரக் கூடிய
ஆபத்தில் இருந்தான். அக்கோவிற் பெரிய குரு வருந்தி அவனுக்காக
வேண்டுதல் புரிந்தான். அப்பொழுது வானவர் இருவர் தோன்றி அவனது
உயிர் வலிமை பெறுமாறு தேற்றினர். தேற்றி, "இவ்விதமாய்த் தேறிய உன்
உயிர் இறைவனை வாழ்த்திய தன்மையாய், இங்கு நடந்தவற்றைத்
திசையெல்லாம் அறியச் செய்வாய்" என்றனர். அவனும், தன் உயிருக்கு
வந்த ஆபத்தினின்று தப்பி, தன் வாழ்நாள் உள்ள அளவும் இறைவனைப்
போற்றினான்.
இங்குக்
குறித்த பெரிய குரு ஓனியாஸ் என்னும் பெயரினன்.
|