| 88 |
இத்திறத்
துயரவ் வேத
மிகன்றன
வரச ரீரா
றத்திறத் திழிபட் டெஞ்ச
வறிதுநா
னன்ன தேவன்
மைத்திறத் திகன்ற யாரும்
வையகத்
துய்யார் காளாய்
பொய்த்திறத் துணர்ந்த தீமை
போக்குதி
யென்றான் மூத்தோன். |
| |
"இத் திறத்து
உயர் அவ் வேதம் இகன்றன அரசர் ஈராறு
அத் திறத்து இழி பட்டு எஞ்ச அறிது நான். அன்ன தேவன்
மைத் திறத்து இகன்ற யாரும் வையகத்து உய்யார், காளாய்!
பொய்த் திறத்து உணர்ந்த தீமை போக்குதி என்றான் மூத்தோன். |
முதியவனான
குண்ணன், மேலே காட்டியவாறு வரலாறு கூறி,
முடிவுரையாக, "காளை போன்றவனே, இவ்வாறு உயர்ந்த அவ் வேதத்தைப்
பகைத்த அரசர் பன்னிருவர் அவ்விதமாய் இழிவு அடைந்து தோற்றதை
நான் அறிவேன். அத்தகைய ஆண்டவனை மயக்கத்தின் திறத்தால் பகைத்த
யாரும் இவ்வுலகில் உய்யமாட்டார். ஆதலால், சுரமி சொன்ன பொய்யின்
அடிப்படையில் நீ செய்யக் கருதிய தீமையை விட்டுவிடு" என்றான்.
இகன்றன
- 'இகன்ற' என்ற பெயரெச்சம் 'அன்' சாரியை பெற்று
வந்தது. அறிது - 'து' விகுதி தன்மை யொருமையும் எதிர் காலமும் காட்டி
நின்றது.
நாவகன்
கருத்தும் குண்ணன் மறுப்பும்
-
விளம், - விளம், - மா, கூவிளம்
| 89 |
பானிமிர்
கனியருட் பவளக் குன்றிழி
தேனிமிர் மொழிப்புனற் செறிந்த வாரியுட்
கோனிமிர் வில்லினன் குளித்தின் புண்டலா
னீனிமி ரிருளுள நீங்கி லாயதே. |
|