"பூ நக, புள்
நக, புனல் செய் பொய்கைகண்
தேன் நக, மலர்ந்த காச் சென்று, அன்னான் சொலும்
பா நக உணர்வு கேட்டு, அறத்தின் பாலதோ,
கூ நக இழிவு அதோ, கூற நீ" என்றான். |
"பூக்கள்
மலர்ந்து மகிழ, பறவைகள் ஒலித்து மகிழ, நீர் நிறைந்த
தடாகத்தில் மலர்களிடையே தேன் நிறைந்து நின்று மகிழ, மலர் பூத்துக்
கிடக்கும் அச்சோலையிற் சென்று, அவன் சொல்லும் பாடல் போன்ற
அறிவுரைகளை நீயே கேட்டு, அதன் பின் அது அறநெறியைச் சார்ந்ததோ,
உலகம் நகைக்கத் தக்க இழிவுடையதோ என்று நீ சொல்லக் கடவாய்"
என்று குண்ணன் கூறி முடித்தான்.
தேன்
+ நக = தே நக: "தேன்மொழி மென்மை மேவின் இறுதி
அழிவும்" என்ற (நன் 214) விதிப்படி இறுதி கெட்டு நின்றது.
| 96 |
அய்யநன்
றிதுவென வடியைத் தாழ்ந்துபோ
யுய்யநன் றுகுமறை யுணர்வ வாவிலா
வெய்யநெஞ் சுணர்ந்ததீ வினைமு டிந்திட
மையநெஞ் சுணர்வினோன் வளனை யண்டினான். |
| |
"அய்ய, நன்று
இது" என அடியைத் தாழ்ந்து போய்,
உய்ய நன்று உகு மறை உணர்வு அவா இலா,
வெய்ய நெஞ்சு உணர்ந்த தீ வினை முடித்திட,
மைய நெஞ்சு உணர்வினோன் வளனை அண்டினான். |
நெஞ்சில்
மயக்க உணர்வு கொண்டவனாகிய நாவகன், "ஐயனே, நீ
கூறிய இதுவே நல்லது" என்று கூறித் தந்தையின் அடியை வணங்கிப்
போனான். உயிர் உய்வதற்கான நன்மையைச் சொரியும் வேதத்தை
அறிவதற்குரிய ஆசை இல்லாமல், தன் கொடிய நெஞ்சு கருதிய தீய செயல்
நிறைவேறும் நோக்கத்தோடு சூசையை அணுகினான்.
|