|
சூசையின்
போதகம்
-
மா, கூவிளம், - விளம், - விளம், - மா
| 97 |
'தீய வுள்ளொளித்
தினியவை முகத்திடைத் தீட்டிப்
போய லர்ந்தபூம் பொழிலிடத் தவன்வரக் கண்டு
தூய நற்றவ விளக்கெறிந் திருளில சூசை
யாய யாவையு மாசறக் கண்டென வறிந்தான். |
| |
தீய உள் ஒளித்து,
இனியவை முகத்திடைத் தீட்டிப்
போய், அலர்ந்த பூம் பொழிலிடத்து அவன் வரக் கண்டு,
தூய நல் தவ விளக்கு எறிந்து இருள் இல சூசை,
ஆய யாவையும் ஆசு அறக் கண்டு என அறிந்தான். |
தீய
நோக்கங்களைத் தன் உள்ளத்துள் மறைத்துக் கொண்டு, இனிய
தோற்றங்களைத் தன் முகத்திலே தீட்டிக் கொண்டு நாவகன் போனான்.
அவ்வாறு மலர்ந்த பூஞ்சோலைக்குள் அவன் வருவதைச் சூசை கண்டான்.
கண்டதும், தூய நல்ல தவமாகிய விளக்கொளி வீசுவதனால் இருள் நீங்கிய
சூசை, அதற்கு முன் நிகழ்ந்த யாவற்றையும் குற்றமறத் தன் கண்ணாற்
கண்டவன் போல அறிந்து கொண்டான்.
'ஆய
யாவையும்' சுரமி தோற்றம் முதற் கொண்டு இதுவரை
கூறப்பட்டவை (3 - 96).
| 98 |
வரைகி டந்தின
மணிகொழித் தொழுகிய நதிசூழ்
கரைகி டந்தமா வழைமகிள் சண்பகங் கமழ்கா
நிரைகி டந்தவர்க் குரைத்தென நாவக னெஞ்சிற்
புரைகி டந்தவை பற்றிமா முனியிவை புகன்றான். |
| |
வரைகிடந்த இனமணி
கொழித்து ஒழுகிய நதி சூழ்
கரைகிடந்த மா வழை மகிள் சண்பகம் கமழ் கா
நிரைகிடந்தவர்க்கு உரைத்து என, நாவகன் நெஞ்சில்
புரைகிடந்தவை பற்றி மாமுனி இவை புகன்றான்: |
அச்சோலை
மலையிலே கிடந்த பலவகை மணிகளை இழுத்து வந்து
கரையிலே ஒதுக்கிப் பாய்ந்து கொண்டிருந்த ஆறு வளைந்து ஓடும் கரையை
அடுத்துக் கிடந்தது; மா சுரபுன்னை மகிளம் சண்பகம் போன்ற மலர்களின்
மணம் கமழ்வது. அச்சோலையில், கும்பலாகக் கூடிக்கிடந்த
|