பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 447

அத்தகையவர் உண்ட நஞ்சும் அவர் உயிருக்கு அமுதமாய் மாறிவிடும்.
மற்றும், அமுதத்தையே உட்கொண்ட தீயவர்க்கு அதுவே உயிரைக்
கொல்லும் நஞ்சாக மாறிவிடும்.

 
                    101
பொன்றும் யாவுமே புரைசெயும் பகையொன்றே பொன்றா
சென்று சென்றடி சென்றதன் னிழலென நீங்கா
தின்று தீமையை யிவன்பிறர்க் கெண்ணிய தன்மைத்
தன்று தீமையை யவன்றனக் கமைவது காண்பான்.
 
"பொன்றும் யாவுமே. புரை செயும் பகை ஒன்றே பொன்றா,
சென்று சென்று அடி சென்ற தன் நிழல் என, நீங்காது,
இன்று தீமையை இவன் பிறர்க்கு எண்ணிய தன்மைத்து,
அன்று தீமையே அவன் தனக்கு அமைவது காண்பான்.

     "இவ்வுலகில் எல்லாமே அழியும். பாவம் வருவிக்கும் பகை ஒன்று
மட்டுமே அழியாமல், செல்லச் செல்ல அடியோடு சேர்ந்து சென்ற தன்
நிழல்போல, நீங்காது இன்று இவன் பிறருக்குத் தீமையை எண்ணியது
போலவே, மற்றொரு நாளன்று அதுபோன்ற தீமை தனக்கு வந்து
அமைவதை அவனே காண்பான்.

     இவன், அவன் என்றவை வேறு பாடின்றி ஒருவனையே சுட்டுவதாகக்
கொள்க.
'தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை, வீயாது அடிஉறைந்
தற்று' (208) 'பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல்
தாமே வரும்' (319) என்ற குறட் கருத்துகள் இங்கு நினைவுகூரத்தக்கன.

 
               102
தீய காஞ்சிர நட்டபின் தீங்கனி கொயவோ
தீய வித்தினர் தீயவை விளைவது காண்பார்
தீய செய்தனர் தீயவ ரென்பவர் மருளா
தீய பட்டனர் தேவரொத் தாரெனப் படுவார்.
 

"தீய காஞ்சிரம் நட்ட பின் தீம் கனி கொயவோ?
தீய வித்தினர் தீயவை விளைவது காண்பார்.
தீய செய்தவர் தீயவர் என்பவர், மருளா,
தீய பட்டவர் தேவர் ஒத்தார் எனப் படுவார்.


     "தீய கனி தரும் எட்டி மரத்தை நட்டு வளர்த்த பின், அதினின்று
இனிய கனியைக் கொய்தல் இயலுமோ? தீமைகளை விதைத்தவர் தீய