|
நாவகன்
சீற்றமும் மாற்றமும்
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
| 109 |
விண்டென
வீங்கு தோளான்
வினாவொளித்
துணர்ந்த யாவுங்
கண்டென முனிவன் சொல்லக்
கனன்றுளம்
புழுங்கச் செந்தீ
யுண்டென வியப்பிற் கேட்ப
வுடைந்தென
நாணிப் பின்னுட்
கிண்டென வெழுந்த சீற்றங்
கிளைத்தெரி
யிடியிற் பாய்ந்தான். |
| |
விண்டு என வீங்கு
தோளான் வினா ஒளித்து உணர்ந்த யாவும்
கண்டு என முனிவன் சொல்ல, கனன்று உளம் புழுங்க, செந்தீ
உண்டு என வியப்பின் கேட்ப, உடைந்து என நாணி, பின் உள்
கிண்டு என எழுந்த சீற்றம் கிளைத்து, எரி இடியின் பாய்ந்தான். |
மலை
போல் திரண்ட தோளை உடைய நாவகன் தன்
கேள்விக்குள்ளே மறைத்து உள்ளத்தில் செய்யக் கருதியிருந்த
எல்லாவற்றையும் முனிவன் கண்ணாற் கண்டவன் போல் வெளிப்படச்
சொல்லிவிட்டான். அதனால் நாவகன் கொதித்து மனம் புழுங்கினான்;
செந்தீயை விழுங்கினவன் போல் வியப்போடு கேட்டான்; உள்ளம்
உடைந்து நாணினான், பின், தன் உள்ளத்தைக் கிண்டி விட்டாற்போல
எழுந்த சினம் கிளை விட்டுப் படர்ந்தமையால், தீயுடன் விழும் இடியைப்
போலச் சூசையை நோக்கிப் பாய்ந்தான்.
| 110 |
பண்ணொன்று
பாட லொன்றப்
பகர்வொன்று
செய்கை நன்றே
புண்ணொன்று படனன் றென்றாய்
புண்படு
கென்ன வெள்ளிக்
கண்ணொன்று கதத்திற் சீறிக்
கன்னமேற்
புடைத்தா னன்னான்
விண்ணொன்று மதியிற் சூசை
மிகமகிழ்ந்
திலங்கி நின்றான். |
|