பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 452

"பண் ஒன்று பாடல் ஒன்ற, பகர்வு ஒன்று செய்கை நன்றே.
புண் ஒன்றுபடல் நன்று என்றாய். புண் படுக" என்ன எள்ளி,
கண் ஒன்று கதத்தின் சீறிக் கன்னம் மேல் புடைத்தான் அன்னான்.
விண் ஒன்று மதியின், சூசை மிக மகிழ்ந்து இலங்கி நின்றான்.


     அந்நாவகன் சூசையை நோக்கி, "யாழ் ஒலியோடு பொருந்திச்
செல்லுகின்ற பாடல் போல, ஒருவன் சொல்லிய ஒன்றை அவனுக்கே
செய்தல் நல்லதேயாம். பிறர் செய்யும் துன்பத்திற்கு உடன்படுதல் நன்று
என்று நீயே சொன்னாய். இத்துன்பத்தை நீயே படுவாயாக" என்று இகழ்ந்து
சொன்னான்; சொல்லிய வண்ணமே, கண்ணிற் பொருந்திய சினத்தோடு சீறிச்
சூசையின் கன்னத்தில் அறைந்தான். அறைகொண்ட சூசை வான்மதி போல
மிக மகிழ்ந்து இலங்கிய முகத்தோடு நின்றான்.

      'படுகென்ன' தொகுத்தல் விகாரம்.

 
               111
தனிக்கதி ருணர்வின் மிக்கோன்
     றயையுறீஇ மகிழ நோக்கிப்
பனிக்கதிர்ப் பகையாங் கஞ்சம்
     படுத்திய முகஞ்செய் வில்லா
னுனிக்கதிர் சுரக்கும் வேலோ
     னொந்துளந் தெளியத் தேறித்
துனிக்கதி ரொழிய வீழ்ந்து
     துணையடி தொழுது சொன்னான்.
 
தனிக் கதிர் உணர்வின் மிக்கோன் தயை உறீஇ மகிழ, நோக்கி,
பனிக் கதிர்ப் பகையாம் கஞ்சம் படுத்திய முகம் செய் வில்லால்,
நுனிக் கதிர் சுரக்கும் வேலோன் நொந்து உளம் தெளியத் தேறி,
துனிக் கதிர் ஒழிய வீழ்ந்து துணை அடி தொழுது சொன்னான்:


      ஒப்பற்ற கதிரவன் போன்று அறிவிற் சிறந்தவனாகிய சூசை அறை
கொண்ட பின்னும் அன்பு பூண்டு மகிழ்ந்தான். நுனியில் ஒளி வீசும்