பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 454

             113
வில்பொறா வாவ லெல்லை
     விழுங்குவ துணர்ந்த தேபோற்
சொல்பொறா வெளிற்றிற் சொன்ன
     பொய்யுணர்ந் திமிரிவ் வேதத்
தெல்பொறாப் பேதை நானு
     மிகன்றதை யொழித்த லோர்ந்தே
னல்பொறா திலங்கு நின்ற
     னருளினா லுணர்வுற் றேனே.
 
"வில் பொறா வாவல் எல்லை விழுங்குவது உணர்ந்ததே போல்,
எல் பொறா வெளிற்றின் சொன்ன பொய் உணர்ந்து, இமிர் இவ்வேதத்து
சொல் பொறாப் பேதை நானும் இகன்று, அதை ஒழித்தல் ஓர்ந்தேன்.
அல் பொறாது இலங்கும் நின்தன் அருளினால் உணர்வு உற்றேனே.

     "ஒளியைப் பொறாத வௌவால் பகலவனை விழுங்கக் கருதியது
போல, உனது சொல்லிற் கண்ட உண்மையைப் பொறுக்க இயலாத
அறியாமையால் சுரமி சொன்ன பொய்யை மெய்யென்று கருதி, ஒலிக்கின்ற
இவ்வேதத்தின் ஒளியைப் பொறாத அறிவிலியாகிய நானும் பகைத்து, அதை
ஒழிக்கக் கருதினேன். பொய்ச் சமயமாகிய இருளைப் பொறாமல் ஒளியாய்
விளங்குகின்ற உனது அருளினால் இப்பொழுது மெய்யுணர்வு பெற்றேன்.

     சுரமி சூசையின் சொல்லிற் கண்ட உண்மையைப் பொறாதவளென்பது
31ஆம் 46ஆம் பாடல்கள் காண்க.

 
          114
நாவலி னிழல்செய் யின்ன
     நாடலா லறியா வேற்றுக்
காவலின் னாட்டி லுள்ள
     கலைநல முளத்தி லெள்ளிப்
பூவலி னின்ற மீன்போற்
     பொலியுணர் வின்றிப் பாவக்
கூவலி னின்ற வென்னைக்
     குணுக்கின மருட்டிற் றன்றோ.