"நாவலின் நிழல்
செய் இன்ன நாடு அலால் அறியா, வேற்றுக்
காவலின் நாட்டில் உள்ள கலை நலம் உளத்தில் எள்ளி,
பூவலில் நின்ற மீன் போல் பொலி உணர்வு இன்றி, பாவக்
கூவலில் நின்ற என்னைக் குணுங்கு இனம் மருட்டிற்று அன்றோ. |
"நாவல்
மரங்கள் நிழல் செய்கின்ற இந்த எசித்து நாட்டை அல்லாமல்
பிற நாடுகளை அறியாமலும், வேற்றரசர் காவலுக்கு உட்பட்ட நாடுகளில்
உள்ள கலை நலங்களை மனத்தில் இகழ்ந்தும், கிணற்றில் நின்ற மீன்போல்
விளங்கிய அறிவு இல்லாமல், பாவமென்னும் கிணற்றில் நின்று கொண்டிருந்த
என்னைப் பேய்க் கூட்டம் மயக்கி வசப்படுத்திக் கொண்டது.
தமிழ்நாட்டு
நாவல் மரங்களை எசித்து நாட்டிற்கு உரிமை செய்த
முனிவர், அம்மரத்தால் 'நாவலந்தீவு' எனப்படும். இந்நாட்டில்
அப்போதிருந்த நிலையையும் கருத்திற் கொண்டு கூறினார் போலும்.
'பூவலில் நின்ற மீன்' பற்றிய பழங்கதையை 23: 110ல் காண்க. குணுங்கு +
இனம் = குணுக்கினம்.
115 |
கரைகொன்ற
கடலிற் பொங்கிக்
கதத்துண்மை
யுணராப் பாலா
னிரைகொன்ற மனத்தி லோர்ந்த
நினைவெலா
நிரையிற் கண்டு
புரைகொன்ற தவத்தின் மிக்கோய்
புகன்றபோ
துளத்தி னாணில்
வரைகொன்ற திண்ண மார்பில்
வடுவற
வுருகா தானேன். |
|
"கரை கொன்ற
கடலின் பொங்கி, கதத்து உண்மை உணராப் பாலால்,
நிரை கொன்ற மனத்தில் ஓர்ந்த நினைவு எலாம் நிரையின் கண்டு,
புரை கொன்ற தவத்தின் மிக்கோய், புகன்ற போது உளத்தின் நாணில்,
வரை கொன்ற திண்ண மார்பில் வடு அற உருகாது ஆனேன். |
|