பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 456

     "பாவத்தை அறவே விலக்கிய தவத்தில் மிக்கவனே, கரையை
மோதிய கடல்போல் எழுந்து, சினத்தின் காரணமாக நான் உண்மையை
உணராத தன்மை கொண்டிருந்தேன். அதனால், ஒழுங்கை மீறிய மனத்தில்
நான் கருதிய எண்ணமெல்லாம் நீ வரிசை முறையில் கண்டு சொல்லியபோது
உள்ளத்தில் நாணினேன். ஆயினும், பாறையை வென்ற உறுதியான மார்பில்
பொருந்திய குற்றம் நீங்குமாறு உருகாது போனேன்.

 
                 116
உணங்கிய மரத்திற் செந்தீ
     யுடன்றெனக் கொண்ட நாணத்
தணங்கிய நெஞ்சிற் சீற்ற
     மழன்றுனைப் புடைத்தக் கானீ
வணங்கிய தன்மை காட்டு
     மாட்சிகண் டொருங்கு பாவத்
திணங்கிய முறைக்கல்லூரி
     யென்வழி யொழியத் தேர்ந்தேன்.
 
"உணங்கிய மரத்தில் செந்தீ உடன்றுஎன, கொண்ட நாணத்து
அணங்கிய நெஞ்சில் சீற்றம் அழன்று உனைப் புடைத்தக்கால், நீ
வணங்கிய தன்மை காட்டும் மாட்சி கண்டு, ஒருங்கு பாவத்து
இணங்கிய முறைக் கல்லூரி என் வழி ஒழியத் தேர்ந்தேன்.

     "காய்ந்த மரத்தில் செந்தீ சினந்து பற்றுதல் போல, கொண்ட
நாணத்தால் வருந்தின என் நெஞ்சில் சினம் மிகுந்து நான் உன்னை
அறைந்தேன். அப்போது நீ பணிந்த தன்மையாய்க் காட்டிய மாண்பைக்
கண்டு, பாவத்திற்கு இணங்கும் முறையைக் கற்பிக்கும் கல்லூரி போல்
இருந்த என் பொய் வேத நெறியை ஒருங்கே விட்டொழிக்கத் தேர்ந்து
கொண்டேன்.

 
                117
காமமே யன்றி நன்னூற்
     கல்வியொன் றறியா பூண்செய்
தாமமே யன்றி வாய்ந்த
     தகவில பாவி நானே