வீமமே இன்றி
யுற்ற
வினையறுத்
தளித்தி மற்றுன்
னாமமே யன்றி நானு
நயப்பவொன்
றுரைக்க றேற்றேன். |
|
"காமமே அன்றி
நல் நூற் கல்வி ஒன்று அறியா, பூண்செய்
தாமமே அன்றி வாய்ந்த தகவு இல பாவி நானே
வீமமே இன்றி உற்ற வினை அறுத்து அளித்தி, மற்று உன்
நாமமே அன்றி நானும் நயப்ப ஒன்று உரைக்கல் தேற்றேன்." |
"காமத்தை
அறிந்ததேயன்றி நல்ல நூலைக் கற்ற கல்வி ஒன்றும்
அறியாமல், அணிந்த அணிகள் தரும் ஒளியேயன்றி வாய்ந்த மாண்பு
ஒன்றும் இல்லாத பாவியாகிய நான் அச்சமே இல்லாமல் செய்த
தீவினையெல்லாம் அறுத்து என்னைக் காப்பாயாக. உன் திருப்பெயரைச்
சொல்வதேயன்றி நீ விரும்புமாறு வேறொன்றும் சொல்ல நான் தெளியேன்".
118 |
என்றிவை
யுணர்விற் சொல்லோ
டெரிவினை
யவிப்பக் கண்ணீர்
குன்றியை யருவி போலக்
கூர்ந்தெழுந்
தொழுகிற் றாகிச்
சென்றியை யன்பும் மார்புஞ்
சென்றொன்றத்
தழுவிச் சூசை
யன்றியை யெவருந் தம்முள்
ளதிசயித்
துவப்பின் மிக்கார். |
|
என்று இவை உணர்வின்
சொல்லோடு, எரிவினை அவிப்பக் கண்ணீர்
குன்று இயை அருவி போலக் கூர்ந்து எழுந்து ஒழுகிற்று ஆகி,
சென்று, இயை அன்பும் மார்பும் சென்று ஒன்றத் தழுவிச் சூசை,
அன்று இயை எவரும் தம்முள் அதிசயித்து உவப்பின் மிக்கார். |
என்று
மேலே காட்டியவாறு நாவகன் இவற்றையெல்லாம் உணர்வோடு
சொன்னான். அவன் தன் தீ வினையை அவிப்பதற்குச் சொரிந்த கண்ணீர்
குன்றிலுள்ள அருவி போல மிகுந்து எழுந்து ஓடிற்று. அப்பொழுது சூசை
அவன் அருகிற்சென்று, தன் உள்ளத்தில் பொருந்திய அன்பும் தன் மார்பும்
|