பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 459

வல்வினை யுலகம் யாவும்
     வளம்பெறப் பயத்த தன்றோ
நல்வினை விளைவு காண்மி
     னயப்பவென் றெவரும் வாழ்ந்தார்.
 
தொல் வினை என்னும் சூலால் தொடர் விளை தளிர்த்து விம்மும்
புல் வினை புல்லா, நோற்ற புலமையோன் ஒருவன் செய்த
வல் வினை, உலகம் யாவும் வளம் பெறப் பயத்தது அன்றோ?
நல் வினை விளைவு காண்மின் நயப்ப!" என்று எவரும் வாழ்ந்தார்.

     பழைய வினை எனப்படும் கருப்பத்தோடு தொடரும் வினையினின்று
தளிர்த்துப் பெருகும் பாவ வினைகள் தன்னைப் பொருந்தாமலே, தவம்
மேற்கொண்ட அறிஞனாகிய ஒருவன் செய்த வன்மை கொண்ட அறச்
செயல் உலகம் யாவும் வளம் பெறத் தக்க பயனை இவ்வாறு விளைவித்தது
அன்றோ?" நல்வினையால் விளையும் பயனை விரும்பிக் கண்டறியுங்கள்!"
என்று கூறி, யாவரும் அதன் மூலம் நல்வாழ்வு வாழ்ந்தனர்.

     நான்காம் அடியை முந்திய பாடலோடு தொடர்ப்படுத்தி, முதல்
மூன்றடிகளைக் கவி கூற்றாகக் கொள்க. சூசை 'தொல்வினை' எனப்படும்
சென்மப் பாவக்கறை நீங்கிப் பிறந்ததாகக் கூறப்படும் பரம்பரைச் செய்தி
3 : 50 இல் காண்க.

                     சூசையும் மூவரும்

     - விளம், - விளம், - மா, கூவிளம்

 
               121
குடம்புரை யிருயுயங் குழைத்த சாந்தினை
நடம்புரை யசைகுழை நக்கி வில்செயப்
படம்புரை யருளெழில் பரப்பி னாற்கிவை
வடம்புரை சுருதிசூழ் வளன்வி ளம்பினான்.
 
குடம்புரை இருபுயம் குழைத்த சாந்தினை
நடம்புரை அசை குழை நக்கி வில் செய,
படம்புரை அருள் எழில் பரப்பினாற்கு இவை
வடம்புரை சுருதி சூழ்வளன் விளம்பினான்: