நீங்காத தன்மையோல்
ஆண்டவன் உன்னை விட்டு நீங்காமல்இனிய
நிழலை உனக்குத் தருவான். இவ்வாறு நீ இனிதாய் வாழ்வாயாக" என்று
சூசை முடித்துக் கூறினான். 'வாழ்கென்றான்' என்பது தொகுத்தல் விகாரம்.
124 |
படைப்பதற்
கரியநற் பரிவிற் றாதையுங்
கிடைப்பதற் கரியதோர் பொருள்கி டைத்தெனா
வுடைப்பதற் கரியவின் புளத்தி லுண்டுளத்
தடைப்பதற் கரியவன் பருளைக் காட்டினான். |
|
படைப்பதற்கு
அரிய நல் பரிவின், தாதையும்,
கிடைப்பதற்கு அரியது ஓர் பொருள் கிடைத்து எனா,
உடைப்பதற்கு அரிய இன்பு உளத்தில் உண்டு, உளத்து
அடைப்பதற்கு அரிய அன்பு அருளைக் காட்டினான். |
தந்தையாகிய
குண்ணனும் செய்தி தெரிந்து, பெறுவதற்கு அரிய நல்ல
அன்போடு அங்கு வந்தான். கிடைத்தற்கரிய ஒரு பொருள் கிடைத்தது
போல், அழிப்பதற்கு அரிய இன்பத்தைத் தன் உள்ளத்தில் அனுபவித்தான்.
தன் உள்ளத்தில் அடைத்து வைக்க இயலாத அன்பையும் அருளையும்
காட்டினான்.
125 |
கழீஇயின
மணியெனக் கசடற் றாரருள்
தழீஇயின நாவகன் றயங்கி யந்நகர்க்
கெழீஇயின திருவிளக் கெனநின் றேத்தினார்
குழீஇயின நலோரெலாங் குழாங்கு ழாங்கொடே. |
|
கழீஇயின மணி
எனக் கசடு அற்று, ஆர் அருள்
தழீஇயின நாவகன் தயங்கி, அந் நகர்க்கு
எழீஇயின திரு விளக்கு என நின்று, ஏத்தினார்
குழீஇயின நலோர் எலாம் குழாம் குழாம் கொடே. |
கழுவப்பட்ட
மணிபோல் குற்றமெல்லாம் நீங்கி, நிறைந்த தெய்வ
அருளைத் தழுவி அணைத்துக் கொண்ட நாவகன் சிறந்து விளங்கி, அந்நகர்
முழுவதற்கும் ஏற்றி வைத்த திருவிளக்குப் போல் நின்றமையால்,
நல்லோரெல்லாரும் கூட்டங் கூட்டமாகக் குழுமி வந்து அவனைப்
போற்றினர்.
|