மழையைத்
தந்து காக்குமென்று கருதிய கார்மேகம் இடியைத் தந்து
தாக்கியதுபொல், தனக்கு ஆதரவென்று கருதிய நாவகன் எதிரி பக்கம்
சேர்ந்து கொண்டான் என்பது உவமையின் கருத்து. நீதி தன் பக்கம் இருக்க,
அதன் மீது காதல் கொண்ட நாவகன் துரோகம் புரிந்துவிட்டானென்பது
சுரமியின் கருத்து.
128 |
தீய்ந்தவோர்
கறலெனக் கருகிச் சிந்தைகெட்
டாய்ந்தவோர் நிலைப்பய னிதோவென் றார்த்துணா
காய்ந்தவோர் சுவாவெனத் தனைக்க டித்தழற்
றோய்ந்தவோ ரரவெனச் சுருண்டு விம்மினாள். |
|
தீய்ந்த ஓர்
கறல் எனக் கருகி, சிந்தை கெட்டு,
"ஆய்ந்த ஓர் நிலைப் பயன் இதோ!" என்று ஆர்த்து, உணா
காய்ந்த ஓர் சுவா எனத் தனைக் கடித்து, அழல்
தோய்ந்த ஓர் அரவு எனச் சுருண்டு விம்மினாள்: |
மேலும்
அவள் தீயில் கருகிய ஒரு விறகு போலத் தன் உடல்
கறுத்தாள்; உணர்வு அழிந்தாள்: "நான் ஆராய்ந்து செய்த ஒரு காரியத்தின்
நிலைத்த பயன் இதுதானோ!" என்று முழங்கினாள்; உண்ணாமல் வயிறு
காய்ந்த ஒரு நாய் போல் தன்னையே கடித்துக் கொண்டாள்; நெருப்பில்
தோய்ந்த ஒரு பாம்பு போலச் சுருண்டு கிடந்து ஏங்கினாள்.
129 |
தேவிழுக்
குறவிவற் சென்று யாவரும்
பூவிழுக் குறவுளம் பொறுப்ப தோவெனா
நாவிழுத் திறந்தெரி நரகிற் றான்றொழு
மோவிழுக் கிடுங்குணுங் குவப்ப மூழ்கினாள். |
|
'தே இழுக்கு உற
இவன் சென்று யாவரும்,
பூ இழுக்கு உற உளம் பொறுப்பதோ!" எனா
நாவு இழுத்து இறந்து, எரி நரகில் தான் தொழும்
ஓவு இழுக்கு இடும் குணுங்கு உவப்ப மூழ்கினாள். |
"என்
தெய்வங்களுக்கு இழுக்கு நேருமாறு யாவரும் இச் சூசையின்
பக்கமாகச் செல்லவும், அதனால் இப்பூவுலகம் இழுக்கு அடையவும் கண்டு
நான் மனம் பொறுத்துக் கொண்டு இருப்பதோ!" என்று சுரமி தன் நாக்கை
இழுத்துப் பிடுங்கி எறிந்து இறந்தாள்; தான் தொழும், வருந்தமும் இழுக்கும்
தரும் பேய் மகிழுமாறு எரியும் நரகத்தில் விழுந்தாள்.
|