பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 466

              2
தீவிற்றா யலைந்த முந்நீர்த்
     திரையினுள் ளலைவி லாதா
னோவிற்றா யோவல் செய்தார்க்
     குளத்தினைந் தருளிற் பேணிக்
காவிற்றா யெவர்க்கு நீழல்
     காத்தமா முனிவன் றானே
யாவிற்றாய்த் தெய்வ மைந்த
     னருணிழற் கொடுங்கி வாழ்வான்.
 
தீவு இற்று ஆய் அலைந்த முந்நீர்த் திரையினுள் அலைவு இலாதான்,
ஓவிற்று ஆய் ஓவல் செய்தார்க்கு உளத்து இனைந்து அருளின் பேணி,
காஇற்றா ஆய்எவர்க்கும் நீழல் காத்த மா முனிவன் தானே
ஆவிற்று ஆய்த் தெய்வ மைந்தன் அருள் நிழற்கு ஒடுங்கி வாழ்வான்.

     அலைந்த கடலின் திரை நடுவே தீவு போல் சூசை அமைந்து,
உலகத்தவர் எவ்வாறு அசைந்தாலும், தான் அசைதல் இல்லாதவனாய்
அறநெறியில் நின்றான்; தான் வருத்தமுற்றாலும், தனக்கு வருத்தம்
செய்தவர்க்காக மனத்துள் வருந்தி, அவர்களையும் அருளோடு பேணி
வந்தான்; சோலை போல் அமைந்து, எவர்க்கும் கருணையாகிய நிழலைத்
தந்து காத்த பெரிய முனிவனாகிய சூசை தானே ஆவல் உற்றவனாய்,
தெய்வ மைந்தனாகிய இயேசுவின் அருளாகிய நிழலுக்குள் ஒடுங்கி வாழ்ந்து
வந்தான்.

     தீவிற்று, காவிற்று என்றவை குறிப்பு வினையாலணையும் பெயர்.
ஓவிற்று, ஆவிற்று என்பன, ஓவு, ஆவு என்ற வினையடியாகப் பிறந்த
தெரிநிலை வினையாலணையும் பெயர். தீவிற்று முதலிய நான்கும்
ஆண்பாலுக்கு ஒன்றன் பால் வந்த வழுவமைதி.

 
                 3
உள்ளுற விண்ணோர்க் காற்றா
     வுயரருட் கடலா மைந்தன்
றெள்ளுற வகன்ற மார்பிற்
     சிதமுடித் தாயுந் தானு