பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 467

மள்ளுற வன்பின் மூழ்கி
     யாங்கவ ரருந்து ஞான
மெள்ளுற வெஞ்சு மென்சொல்
     லியம்பிடத் துணியுங் காலை.
 
உள் உற விண்ணோர்க்கு ஆற்றா உயர் அருட் கடலாம் மைந்தன்,
தெள் உற அகன்ற மார்பில், சித முடித்தாயும் தானும்
அள் உற அன்பின் மூழ்கி, ஆங்கு அவர் அருந்து ஞானம்,
எள் உற எஞ்சும் என்சொல், இயம்பிடத் துணியுங் காலை.

     தெய்வ மைந்தன் வானவரும் உள்ளே நுழைந்து ஆழங் காண
இயலாத உயர்ந்த அருட் கடல் ஆவான். கருணைக் கடலாகிய அம்
மைந்தனின் தெளிந்து பரந்த மார்பினுள்ளே அன்பினால் நெருக்கமாக
மூழ்கி, விண்மீன்களை முடியாக அணிந்த தாய் மரியாளும் சூசையாகிய
தானும் ஞானம் அருந்தினர். அவ்வாறு அங்கு அவர்கள் அருந்திப்பெற்ற
ஞானத்தை எடுத்துச் சொல்லத் துணியுமிடத்து, என்வாய்ச்சொல் இகழத்தக்க
வகையிலே குறையுடைய தாய்க்காணும்.

 
             4
கூர்த்துரா யுவப்பின் மூழ்கிக்
     கொழுந்தவ னுண்ட ஞானம்
பேர்த்துரா யுமிழ்வ தேபோற்
     பெரும்பய னெவர்க்கு மாகச்
சீர்த்துராய் நாட்க டோறுந்
     தேமொழி வாயாற் கூற
நீர்த்துரா யெழீஇய நாடு
     நிகரில கேழ்த்த தம்மா.
 
கூர்த்து உராய், உவப்பின் மூழ்கிக் கொழுந்தவன் உண்ட ஞானம்,
பேர்த்து உராய் உமிழ்வதே போல், பெரும் பயன் எவர்க்கும் ஆக,
சீர்த்து உராய் நாட்கள் தோறும் தே மொழி வாயால் கூற,
நீர்த்து உராய் எழீஇய நாடு நிகர் இல கேழ்த்தது, அம்மா!