பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 469

                6
வானிருந் தெவணு மாள்வோன்
     வளனிடத் தேவு கின்ற
தேனிருந் தலர்சொல் வானோன்
     றிருமகற் கொல்ல வோர்ந்தான்
றானிருந் தொழிந்தா னீண்டே
     தாயொடு மகவுங் கூட்டிக்
கானிருந் தலர்கோ லோய்முற்
     கடிந்தநா டடைதி யென்றான்.
 
வான் இருந்து எவணும் ஆள்வோன் வளனிடத்து ஏவுகின்ற
தேன் இருந்து அலர் சொல் வானோன், "திரு மகற் கொல்ல ஓர்ந்தான்
தான் இருந்து ஒழிந்தான். ஈண்டே தாயொடு மகவும் கூட்டி
கான் இருந்து அலர் கோலோய், முன் கடிந்த நாடு அடைதி" என்றான்.

     வானுலகில் வீற்றிருந்து எவ்விடங்களையும் ஆள்வோனாகிய
ஆண்டவன் சூசையிடம் ஒரு வானவனை ஏவுகின்றான். தேன் பொருந்தி
மலரும் சொல்லை உடைய அவ்வானவன், 'மணம் பொருந்தி அலரும்
பூங்கோலை உடையவனே, "திருமகனைக் கொல்ல நினைத்திருந்த எரோதன்
இவ்வுலகினின்று இறந்தொழிந்தான். இப்பொழுதே நீ தாயோடு மகனையும்
கூட்டிக்கொண்டு, முன் விட்டு வந்த சூதேய நாட்டை அடைவாய்" என்றான்.

 
                   7
பணிமொழி பணிந்து தாயும்
     பாலனு முறையுட் சென்று
மணிமொழித் தேவ தூது
     வகுத்தவை வளனே கூற
வணிமொழி யிளவ னன்றென்
     றயனமோர்ந் தெவர்க்குங் கூறா
துணிமொழி யுறுதி யாகச்
     சொல்லினான் மதுப்பெய் கோலான்.