பணி மொழி பணிந்து,
தாயும் பாலனும் உறை உள் சென்று,
மணி மொழித் தேவ தூது வகுத்தவை வளனே கூற,
அணி மொழி இளவல், "நன்று" என்று, அயனம் ஓர்ந்து எவர்க்கும் கூறா,
துணி மொழி உறுதியாகச் சொல்லினான் மதுப் பெய் கோலான்: |
தேன்
சொரியும் பூங்கோலை உடைய சூசை, வானவனின் ஏவல்
மொழியைப் பணிவோடு ஏற்றான்; தாயும் சிறுவனும் இருந்த இடத்துக்குச்
சென்றான்; அவ்வானவன் அழகிய சொல்லால் தெய்வத் தூதாகத் தனக்குச்
சொல்லியவற்றை அவர்களுக்குச் சொன்னான். அழகிய மொழி பேசும்
சிறுவன், "நல்லது, போவோம்" என்றான். எனவே, போக நினைத்து, அதனை
எவர்க்கும் கூறாமல் அம்மக்கள் துணிவு பெறுவதற்கான சொற்களை மட்டும்
சூசை பின்வருமாறு அவர்களுக்கு உறுதியாகச் சொன்னான்:
8 |
வரையெனத்
துயரிற் போன்மின்
வாருதி
நாடி யோடுந்
திரையென விறைவற் சேர்மின்
றீயென
வகன்மின் றீய
நுரையென வாழ்க்கை காண்மின்
னோயென
வுயிரைக் காமின்
கரையெனக் கதியை வெஃமின்
கசடறு
நெறியி தென்றான். |
|
"வரை எனத் துயரில்
போல்மின்; வாருதி நாடி ஓடும்
திரை என இறைவற் சேர்மின்; தீ என அகல்மின் தீய;
நுரை என வாழ்க்கை காண்மின்; நோய் என உயிரைக் காமின்;
கரை எனக் கதியை வெஃமின்; கசடு அறு நெறி இது" என்றான். |
"துயரத்தினிடையே
மலை போல் அசையாதிருங்கள்; கடலை நாடி
ஓடும் ஆறு போல் இறைவனையே விடாது நாடி அடையுங்கள்; தீயவற்றைத்
தீப் போலக் கருதி விட்டு விலகுங்கள்; வாழ்க்கை நுரை போல
நிலையற்றதென்று கண்டு உணருங்கள்; நோயை வருமுன்னும் வந்தபின்னும்
காப்பது போல ஆன்மாவைப் பாவம் அணுகாமலும் அணுகியபின்
|