நில்லாமலும் காத்துக்
கொள்ளுங்கள்; நீந்துவோர் கரையை நாடுவது போல
மோட்சக் கதியை நாடுங்கள்; இதுவே பாவ மாசு அறுவதற்கான வாழ்க்கை
நெறி" என்று சூசை உறுதியாகச் சொன்னான்.
'வரையென'
என்ற விடத்து, 'என' வேண்டா வழிவந்த இடைச்சொல்.
'வெஃமின்' என்பதை வெஃகுமின் என்பதின் இடைக் குறைவாகக்
கொண்டார் வீரமாமுனிவர்.
இரவிமாபுரத்தார்
துயரம்
-
காயம், - காய், - மா, தேமா, - - காய்
9 |
பண்டீண்டி
லேங்குதல்போ
லன்பும்
பூசல் பரவுமெனா
கண்டீண்டி மருட்டியகா
ரிரவி
னாப்பண் கரந்ததுபோல்
விண்டீண்டி யாடுகொடி
மாட
நல்லூர் விட்டகன்று
புண்டீண்டி யாற்றுமருந்
தொத்த
நீரார் போதலுற்றார். |
|
பண் தீண்டில்
ஏங்குதல் போல், அன்பும் பூசல் பரவும் எனா,
கண் தீண்டி மருட்டிய கார் இரவின் நாப்பண், கரந்தது போல்,
விண் தீண்டி ஆடு கொடி மாட நல் ஊர் விட்டு அகன்று,
புண் தீண்டி ஆற்றும் மருந்து ஒத்த நீரார் போதல் உற்றார். |
விரலால்
தடவினால் யாழ் ஒலித்தல் போல், அன்பும் தொடப்பட்டால்
புலம்பும் ஓசை பரவுமென்று கருதி, புண்ணைத் தொட்டு ஆற்றும் மருந்தை
ஒத்த தன்மையுள்ள சூசையும் மரியாளும் குழந்தை நாதனும், கண்ணைத்
தீண்டி மயக்கிய கரிய இரவின் நடுவே, ஒளித்துப் போதல் போல்,
மேகத்தைத் தடவி ஆடும் கொடியைத் தாங்கிய மாளிகைகள் நிறைந்த
இரவிமாபுரம் என்னும் நல்ல ஊரை விட்டு அகன்று போகத் தொடங்கினர்.
|