| 10 |
நதிதள்ளி
நீந்தறியா
சுழிபட் டார்போ னைந்தெசித்தார்
பதிதள்ளிப் போவதறிந்
தயர்வா ரென்றுட் பரிந்திரங்கிக்
கதிதள்ளி நடுநிற்பார்
கயவ ரெனபின் றேறிவளன்
மதிதள்ளி யிடுமன்பிற்
பகைநன் றென்றே வழிநடந்தான். |
| |
நதி தள்ளி,
நீந்து அறியா, சுழி பட்டார் போல், நைந்து எசித்தார்
பதி தள்ளிப் போவது அறிந்து அயர்வார் என்று உள்பரிந்து இரங்கி,
கதி தள்ளி நடு நிற்பார் கயவர் என, பின் தேறிவளன்,
மதி தள்ளி இடும் அன்பின் பகை நன்று என்றே, வழி நடந்தான். |
தான்
நகரை விட்டுப் போவதைப் பின் எசித்து நாட்டார் அறிவார்.
அறிந்து ஆற்றிலே தள்ளுண்டு நீந்தவும் தெரியாமல் நீர்ச்சுழியில்
அகப்பட்டுக் கொண்டவர்போல் வருந்திச் சோர்வர். இதை நினைந்து சூசை
முதலில் தன் உள்ளத்தில் பரிவு கொண்டு இரங்கினான். தாம் சென்று
சேரவேண்டிய கதியைப் புறக்கணித்து இடைநடுவே நின்று போவார், கயவர்
எனப்படுவார்; ஆண்டவன் தந்த மதியைத் தள்ளிக் காட்டும் அன்பை விடப்
பகையே நல்லது. இவ்வாறு பின் தெளிந்து வழி நடந்தான்.
| 11
|
ஊராழி யகன்றிவர்போந்
துயர்த்தீப் பட்டென் றுருச்சிவப்ப
நீராழி யகன்றிரவி
தோன்றி மூவர் நீங்கினரென்
றீராழி யுட்கவிழ்ந்த
கலமொத் தந்தோ வென்றலறிப்
பேராழி யொத்தநகர்
புலம்பு மோதை பெரிதன்றோ. |
|