ஊர் ஆழி அகன்று
இவர் போம் துயர்த் தீப்பட்டு என்று உருச் சிவப்ப
நீர் ஆழி அகன்று இரவி தோன்றி, மூவர் நீங்கினர் என்று
ஈர் ஆழியுள் கவிழ்ந்த கலம் ஒத்து, "அந்தோ!" என்று அலறி,
பேர் ஆழி ஒத்த நகர் புலம்பும் ஓதை பெரிது அன்றோ |
ஊரின்
எல்லையைக் கடந்து இவர்கள் போகும் துயரமாகிய தீயில்
அகப்பட்டது போன்று தன் உருவம் சிவக்க நீர் நிறைந்த கடலை
விட்டகன்று ஞாயிறு உதித்தது. பெரிய கடல் போன்ற அந் நகரம்
இம்மூவரும் நீங்கினர் என்று அப்பொழுது தெரிந்து கொண்டது. அதனால்,
தான் அறுத்துச் சென்ற கடலினுள் கவிழ்ந்த கப்பல் போன்று, "ஐயோ!"
என்று அலறி, அந்நகர் புலம்பும் ஓசை பெரிதாயிற்று.
'உருச்சிவப்ப...இரவி
தோன்றி' தற்குறிப்பேற்ற வணி
| 12 |
பொய்ம்
மறுத்தீர் புரைமறுத்தீர்
பொய்த்த கொன்னூல் புகைந்துளங்கொள்
மைம்மறுத்தீர் மறையுரைத்தீர்
பிள்ளை யைத்தாய் மறுத்தென்னக்
கைம்மறுத்தீர் போயொளித்தீ
ரந்தோ வென்னக் கைமறுத்து
மெய்ம்மறுத்தீர் துயராற்றா
துயிர்நீத் தன்ன மெய்மறந்தார். |
| |
"பொய் மறுத்தீர்;
புரை மறுத்தீர்; மொய்த்த கொன்நூல் புகைந்து உளம்
கொள்
மை மறுத்தீர்; மறை உரைத்தீர்; பிள்ளையைத் தாய் மறுத்து என்னக்
கை மறுத்தீர்; போய் ஒளித்தீர், அந்தோ!" என்னக் கை மறுத்து,
மெய் மறுத்து ஈர் துயர் ஆற்றாது உயிர் நீத்து அன்ன மெய் மறந்தார். |
இரவிமாபுரத்தார்,
"எம்மிடம் கண்ட பொய்யை விலக்கினீர்கள்;
பாவத்தை விலக்கினீர்கள்; இந்நாட்டில் மொய்த்துக் கிடந்த வீணான
நூல்களால் புகைந்து நாங்கள் மனத்தில் கொண்டிருந்த இருளை
|