|
விலக்கினீர்கள்;
உண்மையான வேதத்தை எடுத்துச் சொன்னீர்கள்;
இப்பொழுது பிள்ளையைத் தாயே விலக்கியது போலக் கைவிட்டீர்கள்;
எங்கேயோ போய் ஒளித்துக் கொண்டீர்கள், ஐயோ!" என்று கைகளை
உதறி, அறுக்கும் துயரத்தைத் தாங்க இயலாமல் உடலை உதறி விட்டு
உயிர் நீங்கியது போன்று மெய் மறந்து நின்றனர்.
| 13 |
இன்றொளித்த
சுடரொடுமுச்
சுடரா நீவி ரிராவிருட்கண்
ணின்றொளித்த திறமென்னோ
வெங்கட் டீதி னிலைதானோ
குன்றொளித்த மணியொத்தீ
ரந்தோ வென்னக் குழைந்தலறிக்
கன்றொளித்த கறவையனா
ருளைந்து விம்மிக் கலுழ்கின்றார். |
| |
"இன்று ஒளித்த
சுடரொடு, முச் சுடராம் நீவிர், இரா இருட்கண்
நின்று ஒளித்த திறம் என்னோ? எம்கண் தீதின் நிலைதானோ?
குன்று ஒளித்த மணி ஒத்தீர், அந்தோ!" என்னக் குழைந்து அலறி,
கன்று ஒளித்த கறவை அனார் உளைந்து விம்மிக் கலுழ்கின்றார். |
"இன்று
மறைந்த கதிரவனோடு, மூன்று சுடர்களாகிய நீங்கள், இரவின்
இருளிடையே நிலையாக ஒளித்துச் சென்ற காரணம் யாதோ? எம்மிடமுள்ள
பாவத்தால் ஏற்பட்ட நிலை தானோ இது? ஐயோ, குன்றில் மறைத்த மணி
போல் மறைந்து கொண்டீர்களே!" என்று குழைந்து அலறி, கன்று
தன்னிடமிருந்து மறைக்கப்பட்ட பசுவைப் போன்று அவர்கள் வருந்தி ஏங்கி
அழுகின்றனர்.
| 14 |
வரைநாட்டி
நீர்கடைந்தாங்
கமுது நஞ்சும் வந்தனவென்
றுரைநாட்டி யுண்டெனமுற்
கதையிற் கேட்டே மொண்டவஞ்செய் |
|