கரைநாட்டி
யறக்கடலா
மிவர்தம் மன்பின் கனிவுண்டாய்
விரைநாட்டி லகன்றிடரா
லுண்டா நஞ்சின் விளைவென்பார். |
| |
"வரை நாட்டி
நீர் கடைந்து, ஆங்கு அமுதும் நஞ்சும் வந்தன என்று
உரை நாட்டி, உண்டு என முன் கதையில் கேட்டோம். ஒண் தவம் செய்
கரை நாட்டி அறக் கடலாம் இவர்தம் அன்பின் கனிவு உண்டாய்,
விரை நாட்டில் அகன்று, இடரால் உண்டாம் நஞ்சின் விளைவு" என்பார் |
"மலையை
மத்தாக நிறுத்திப் பாற்கடல் நீரைக் கடைந்து, அங்கு
அமுதும் நஞ்சும் ஒன்றாக வெளிப்பட்டு வந்தன என்ற சொல்லை
நிலைநிறுத்தி, அவ்வாறு வருவதும் உண்டென்று முன்னே கதையில் கேட்டு
அறிந்துள்ளோம். இப்பொழுதோ, ஒளி பொருந்திய தவத்தை அமைத்த
கரையாகக் கொண்டு அறக் கடலாய் விளங்கும் அவர்களுடைய அன்பின்
கனிவு என்னும் அமுதம் முதலில் உண்டாகி, மணம் கமழும் இந்நாட்டை
விட்டு இவர்கள் நீங்கி, அந்தத் துன்பத்தால் நஞ்சின் விளைவும் கூடவே
உண்டாகும்" உன்று சொல்லி வருந்துவர்.
| 15 |
கான்சுரக்கு
மிளமுல்லை
நட்டுப் பொன்னாற் கடைகோலி
வான்சுரக்கும் பனிமாலைப்
பந்தர் முத்த மணற்பாய்த்தித்
தேன்சுரக்கு நீரூட்டி
வளர்த்த பூங்காத் தீந்தறவோ
மீன்சுரக்கு மிராவொளித்துப்
போதீர் நம்மை விட்டென்பார். |
| |
|
"கான் சுரக்கும்
இளமுல்லை நட்டு, பொன்னால் கடை கோலி,
வான் சுரக்கும் பனி மாலைப் பந்தர் முத்த மணல் பாய்த்தி,
தேன் சுரக்கும் நீர் ஊட்டி வளர்த்த பூங்கா தீய்ந்து அறவோ
மீன் சுரக்கும் இரா ஒளித்துப் போதீர் நம்மை விட்டு" என்பார்.
|
|