"கூண்டு உண்டாம்
குஞ்சு அகலாது ஒம்பும் பல்புள் குலமும், கார்
கீண்டு உண்டாம் இடிக்கு அஞ்சும் பிடியைத் தாங்கும் கெழுங் கரியும்
ஆண்டு உண்டாம் கான் துறுங்கால் காண்பீர்; காண்கில், ஆதரவு அற்று
ஈண்டு உண்டாம் நமை நினைமின்" என்பார்; ஆஅ! தகாது" என்பார். |
"கூடுகளில்
உள்ள தம் குஞ்சுகளை விட்டு நீங்காது பேணும் பல
பறவை இனங்களையும், மழை மேகத்தைப் பிளந்து உண்டாகும் இடிக்கு
அஞ்சும் பெண் யானையை ஆதரவாய்த் தாங்கும் அருகில் உள்ள ஆண்
யானையையும் அங்கு வழியிலுள்ள காட்டை அணுகும் போது காண்பீர்கள்;
கண்டால், ஆதரவற்று இங்கேயுள்ள எங்களை நினையுங்கள்" என்பர்;
அதனோடு, "ஆஅ! எங்களிடம் சொல்லாமலே பிரிந்த செயல் தகாது"
என்றும் கூறுவர்.
| 19 |
சீலநீர்க்
கருமுகில்கள்
மின்னி யார்த்துச் செய்யரவு
நீலநீர்க் கடலரவு -
மெஞ்ச வெஞ்சி நெடிதழுதார்
சாலநீர்க் கடன்மடையைத்
திறந்தாற் போலத் தணந்தாரைக்
கோலநீர்க் கடலாமந்
நகர்நீத் தீட்டங் கொடுதொடர்ந்தார் |
| |
சீல நீர்க்
கருமுகில்கள் மின்னி ஆர்த்துச் செய் அரவும்,
நீல நீர்க் கடல் அரவும் எஞ்ச எஞ்சி நெடிது அழுதார்;
சால நீர்க் கடல் மடையைத் திறந்தாற் போல, தணந்தாரை,
கோல நீர்க் கடலாம் அந்நகர் நீத்து, ஈட்டம் கொடு தொடர்ந்தார். |
சிறந்த
நீரைக் கொண்டுள்ள கருமேகங்கள் மின்னி முழங்கிச் செய்யும்
ஓசையும், நீல நிறக் கடலின் ஓசையும் குறைபடுமாறு மிஞ்சி நின்று
இரவிமாபுரத்தார் நெடுநேரம் அழுதனர்; பின், மிக்க நீருள்ள கடலின்
மடையைத் திறந்தாற் போல, அழகுத் தன்மையோடு கடலாய்ப் பரந்து
|