| 24 |
வரையீர்புன
லேமழை யீர்வரையே
விரையீரம றாவிரி பூந்தடமே
சுரையீரம லர்த்தொடை சூழ்பொழிலே
யுரையீருயி ரின்னுயி ழுள்ளுழியே. |
| |
"வரை ஈர் புனலே,
மழை ஈர் வரையே,
விரை ஈரம் அறா விரி பூந் தடமே,
சுரை ஈர மலர்த் தொடை சூழ் பொழிலே,
உரையீர் உயிரின் உயிர் உள் உழியே." |
"மலையை
இழுத்த வண்ணமாய்ப் பாயும் நீரே, மேகத்தை இழுக்கும்
மலையே, மணமும் ஈரமும் அறாமல் விரியும் மலர்த் தடாகமே, சுரபுன்னை
போன்ற குளிர்ந்த மலர்கள் மாலை போல் சூழ்ந்துள்ள சோலையே, எங்கள்
உயிருக்கு உயிராகிய அம்மூவரும் மறைந்துள்ள இடத்தை நீங்களேனும்
சொல்லுங்கள்."
| 25 |
உருடேர்வழி
யொண்கொடி யாடுமென
மருடேர்வழி யற்றும னந்தளர
வருடேர்வழி யாயின ரையெவணும்
பொருடேர்வழி தேடினர்போ றுருவார். |
| |
உருள் தேர் வழி
ஒண் கொடி ஆடும் என,
மருள் தேர் வழி அற்று மனம் தளர,
அருள் தேர் வழி ஆயினரை எவணும், பொருள்
தேர் வழி தேடினர் போல் துருவார். |
உருளுகின்ற
தேர் சென்ற வழியே அதன் ஒளி பொருந்திய கொடியும்
ஆடிச் செல்வது போல், தம் மயக்கம் தீர்வதற்குத் தெரிந்து கொள்ளக்
கூடிய வழியே அற்று அவர்கள் மனம் தளர்ந்தது. அருளை அறிந்து
தெளிவதற்கு வழிபோல் ஆயின அம்மூவரையும், அரும் பொருளைத்
தெரிந்து பெற வழி தேடினவர் போல் எவ்விடத்தும் தேடுவர்.
'துருவுவார்'
என்ற சொல் 'துருவார்' என இடைக்குறைவாய் நின்றது.
|