அயர்வார், உரும்
ஏற்றின் அரற்றினராய்த்
துயர்வார்; இரு கண் மழை தூவி அழ
மயர்வார்; மெலிவார்; மனம் ஓங்கிய பின்,
பெயர்வார் நசை உள் பெயரா தொடர்வார |
இவ்வாறு
சோர்வர்; இடியேறு போல் புலம்பியவராய்த் துயரம்
கொள்வர்; இரு கண்களும் மழை போலக் கண்ணீர் தூவி அழ மயங்குவர்;
மெலிவர்; மனம் எழுச்சி பெற்றபின், தம்மை விட்டு நீங்கிய அம்மூவர் மீது
கொண்ட ஆசை உள்ளத்தை விட்டுப் பெயராமல் அவர்கள் சென்ற வழியே
தாமும் தொடர்ந்து செல்வர்.
திருமகன்
அருளால் தேறித் திரும்புதல்
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
| 35 |
பேர்வள ரன்பின்
மிக்கார்
பிரியுங்கா றம்மிற் றேறிற்
கூர்வள ரழலைத் தூண்டிக்
கொந்தல்போ லுரையிற் பொங்குஞ்
சூர்வளர் தன்மைத் துள்ளஞ்
சுடுமென வொளித்த மூவ
ரார்வளர் துயர்கொண் டிஃதாங்
காகிநீ டகன்று போனார். |
| |
|
பேர் வளர்
அன்பின் மிக்கார் பிரியுங் கால், தம்மில் தேறின்,
கூர் வளர் அழலைத் தூண்டிக் கொந்தல் போல், உரையில்
பொங்கும்
சூர் வளர் தன்மைத்து உள்ளம் சுடும் என ஒளித்த மூவர்,
ஆர் வளர் துயர் கொண்டு இஃது ஆங்கு ஆகி, நீடு அகன்று
போனார்.
|
தம்முள்
வளர்ந்த பேரன்பு மிக்கவர் பிரியும் போது, தமக்குள் பேசித்
தேற முயன்றால், மிக வளர்ந்த நெருப்பை மேலும் தூண்டினால் அது
சினந்து எரிவது போல், அப்பேச்சினிடையே பொங்கும் துன்பம் வளரும்
தன்மையாய் மனத்தைச் சுடும். இவ்வாறு கருதி மறைந்து சென்ற மூவரும்,
நிறைந்து வளரும் துயரங் கொண்டு இரவிமாபுரத்தார்க்கு அச்சோலையில்
இது நடந்து கொண்டிருக்கையில், நெடுந்தூரம் தள்ளிச் சென்று விட்டனர்.
|