| 36 |
மாணெறி வளர்ந்த
வன்பின்
மனந்ததை யருள்மிக் கார்க்குஞ்
சேணெறி யுணர்வி னார்க்குஞ்
சேணிலை யாகா வன்னார்
வாணெறி குடைந்த நெஞ்சில்
வருந்தியாங் காய யாவுஞ்
சேணெறி யகன்ற மூவர்
சென்றுகண் டன்ன கண்டார். |
| |
மாண் நெறி வளர்ந்த
அன்பின் மனம் ததை அருள் மிக்கார்க்கும்,
சேண் நெறி உணர்வினார்க்கும் சேண்நிலை ஆகா அன்னார்
வாள் நெறி குடைந்த நெஞ்சில் வருந்தி ஆங்கு ஆய யாவும்,
சேண் நெறி அகன்ற மூவர் சென்று கண்டு அன்ன கண்டார். |
சிறந்த
நெறிப்படி வளர்ந்த அன்பினால் மனத்தில் செறிந்த அருள்
மிகுந்தவர்க்கும், வானுலக நெறிப்படி தெய்வக் காட்சியில் காணும்
உணர்வுடையோர்க்கும் தொலைவான இடம் என்று எவையும் ஆவதில்லை.
எனவே, துன்பம் வாள் போலப் புகுந்து, அரிந்த மனத்தோடு
அவ்விரவிமாபுரத்தார் வருந்தி அங்கு அடைந்த துயரம் எல்லாவற்றையுமே,
தொலைவான வழியில் அகன்று போன அம் மூவரும் நேரிற் சென்று
கண்டது போல் கண்டு அறிந்தனர்.
| 37 |
தேனக மலர்ந்த
கோலான்
றெளியுளத் திரங்கி யையா
கானக மன்னார் நண்ணிற்
காய்துயர் காமி னென்ன
வானக மிளிர்மீன் வாகை
மணிமுகி லூர்தி கொண்டு
பானக வருள்கொ டெய்வப்
பாலனை வேண்டி னானே. |
| |
தேன் அக மலர்ந்த
கோலான் தெளி உளத்து இரங்கி, "ஐயா,
கானகம் அன்னார் நண்ணின், காய் துயர் காமின்" என்ன,
வானகம்மிளிர் மீன் வாகை மணி முகில் ஊர்தி கொண்டு,
பால் நக அருள் கொள் தெய்வப் பாலனை வேண்டினாளே. |
|