திரையுடைத்
தொடர்பின் வந்தார்
திறனுணர் கிலராய் நின்றே
யுரையுடைத் துயர்ந்த ஞானத்
தொளியெழீஇத் தேறி னாரே. |
| |
கரை உடைத்து
அரவு உய்த்து ஓடும் கடல் கரை இட்டதே போல்,
புரை உடைத்தவன் செய் ஏவல் புணர்ந்த நீள் கூலம் ஆக,
திரை உடைத் தொடர்பின் வந்தார் திறன் உணர்கிலராய் நின்றே,
உரை உடைத்து உயர்ந்த ஞானத்து ஒளி எழீஇத் தேறினாரே. |
கரையை
உடைத்துக் கொண்டு ஓசை எழுப்பி ஓடும் கடலுக்குக்
கரை கட்டியதுபோல், பாவத்தை அழிக்க வந்தவானாகிய திருமகன் இட்ட
கட்டளை நீளமாகப் பொருந்திய அணைபோல் ஆயிற்று. ஆகவே, ஆற்று
வெள்ளம் போன்ற அன்புத் தொடர்போடு வந்து கொண்டிருந்த
இரவிமாபுரத்தார் காரணம் உணர இயலாதவராய் நின்றனர்; பின் சொல்லுக்கு
அடங்காது உயர்ந்த ஞான ஒளி தம் உள்ளத்தில் உதிக்கவும் தேறிக்
கொண்டனர்.
எழுந்து
என்பது 'எழீஇ' எனச் சொல்லிசை அளபெடை ஆயிற்று.
| 40 |
தீயவு நல்ல
வாமே
திருவுளமாக வந்தாற்
றூயவுந் தீய வாமே
துகள்வழி வந்தா லென்னாக்
காயவுண் மெலிந்த நெஞ்சார்
கருத்திடைக் குளிரத் தேறிப்
பாயவுண் மலியின் பாற்றம்
பதிநகர் மீடல் சூழ்ந்தார். |
| |
"தீயவும் நல்ல
ஆமே திருவுளம் ஆக வந்தால்;
தூயவும் தீய ஆமே துகள் வழி வந்தால்" என்னா,
காய உள் மெலிந்த நெஞ்சார் கருத்திடைக் குளிரத் தேறி,
பாய உள் மலி இன்பால் தம்பதி நகர் மீள்தல் சூழ்ந்தார்: |
|