விண்உளே பிறந்தது
ஓர் தளத்தின் விண்ணவர்
பண் உளே பிறந்தது ஓர் இசைகள் பாடிய,
மண் உளே பிறந்தது ஓர் வடுவை மாற்றினர்
தண் உளே பிறந்தது ஓர் தடத்தின் நண்ணினார். |
விண்ணுலகிலே
தோன்றிய ஒரு படை அளவான வானவர் யாழிலே
பிறந்த ஒப்பற்ற இசைகளைப் பாடி வந்தனர். மண்ணுலகிலே தோன்றிய ஒரு
பாவத்தை மாற்ற வந்த மூவரும், அப்பாடல்களைக் கேட்ட வண்ணமாய்,
தன்னுள்ளே குளிர்ச்சியைக் கொண்ட ஒரு தடாகத்தை அடைந்தனர்.
'பிறந்ததோர்
இசைகள்' என்றவிடத்து ஒருமை பன்மை மயக்கம்.
| 45 |
மைக்கொடு
குவளைக்கண் ணோக்கி வாரிசக்
கைக்கொடு விளித்தபூம் பொய்கை கண்டுளி
பொய்க்கொடு மருட்டவோ வென்று போயினார்
மெய்க்கொடு சுருதிநூல் விளைத்த விஞ்சையார். |
| |
|
மைக் கொடு
குவளைக் கண் நோக்கி, வாளிசக்
கைக் கொடு விளித்த பூம் பொய்கை கண்டு உளி,
"பொய்க் கொடு மருட்டவோ?" என்று போயினார்
மெய்க் கொடு சுருதி நூல் விளைத்த விஞ்சையார்.
|
மெய்யை
அடிப்படையாகக் கொண்டு வேத நூல் தம்மிடம்
தோற்றுவித்த கல்வியைக் கொண்டுள்ள அம்மூவரும், மைதீட்டிய
குவளைமலராகிய கண்ணால் தம்மை நோக்கி, தாமரை மலராகிய
கையைக்கொண்டு அழைத்த அழகிய தடாகத்தைக் கண்டபோது,
"பொய்யான இன்பத்தைக் காட்டி எம்மை மயக்கவோ அழைக்கின்றாய்?"
என்று கூறி, அகன்று போயினர்.
| 46 |
தூவியஞ் சிறையனந்
தொடர்கு டைசெயக்
கூவியங் குயிலியாழ் குளிற மஞ்ஞைக
ளோவியஞ் சிறைவிரித் துவப்பி லாடமுன்
பூவியந் துணர்த்தடம் பொருந்திப் போயினார். |
| |
தூவி அம் சிறை
அனம் தொடர் குடை செய,
கூவி அம் குயில் யாழ் குளிற, மஞ்ஞைகள்
ஓவியம் சிறை விரித்து உவப்பில் ஆட, முன்
பூ வியம் துணர்த் தடம் பொருந்திப் போயினார். |
|