|
போன
வழியில், தூவிகளாலாகிய அழகிய சிறகுள்ள அன்னங்கள்
மேலே பறந்து தொடர்ந்து, குடை பிடித்தாற்போல் நிழல் தந்தன. அழகிய
குயில்கள் கூவி யாழ்போல் ஒலித்தன. மயில்கள் சித்திரப் படம் போன்ற
சிறகுகளை விரித்து மகிழ்ச்சியோடு ஆடின. அவர்கள் இயற்றைக் கண்டு
நின்று விடாமல், பெருமையுள்ள பூங்கொத்துக்கள் இருபுறமும் மலர்ந்து
நின்ற வழித் தடத்தோடு முன் நோக்கிச் சென்றனர்.
குயில்
+ யாழ் - 'குயிலியாழ் எனப் புணர்ச்சியில் இடையே இகரம்
பெற்றது. ஓவியம் + சிறை - 'ஓவியச் சிறை' என வராமல் 'ஓவியஞ் சிறை'
எனச் செய்யுளோசைப் பொருட்டு மெலித்தல் விகாரம் பெற்றது.
'பூவியந்துணர்' என்பதனை, வியம் 'பூந்துணர்' எனப் பிரித்துக் கூட்டுக.
| 47 |
ஆவிநோய்
செயும்புரை யழிக்கு மூவர்பொய்க்
காவிநோய் செயுந்தும் கழற்கு நோய்செயா
பூவினோய் செயுமளி குடைந்த பூமதுந்
தூவிநோய் செயுந்தடந் துணரிற் றாயதே. |
| |
ஆவி நோய் செயும்
புரை அழிக்கும் மூவர் போய்,
காவி நோய் செயும் தம கழற்கு நோய் செயா,
பூவில் நோய் செயும் அளி குடைந்த பூ மதுத்
தூவி, நோய் செயும் தடம் துணரிற்று ஆயதே. |
உயிருக்குத்
துன்பம் தரும் பாவத்தை அழிக்கும் மூவரும்
அவ்வழியே போயினர். அப்பொழுது, தம் மென்மையால் கருங்குவளை
மலருக்கு வருத்தம் செய்யும் தம்முடைய கால்களுக்கு வருத்தம்
செய்யாதவாறு அப்பாதை அமைந்தது. எவ்வாறு? பூவுக்குத் துன்பம் செய்யும்
இயல்புள்ள வண்டு குடைந்த பூவினின்று தேனைத் தூவியதனால், துன்பம்
செய்யும் வழித்தடம் பூங்கொத்துப்போல் மென்மையாயிற்று.
| 48 |
தனங்கிடந்
தெனக்கிளி தாங்கி லாந்தினைப்
புனங்கிடந் தனபரப் பகன்று போய்துளிக்
கனங்கிடந் தெனக்கரி கிடந்த காடும் போய்
வனங்கிடந் தனவழி மருவிற் றாயதே. |
|