நீர் முகத்து
இரவி கை நீட்டி, பொற்பு உறப்
பார் முகத்து இரவு இருள் படத்தை நீத்து என,
சூர் முகத்து அழல் துயர் துடைத்து, மூவர் வந்து,
ஏர் முகத்து எழுந்த கான் இலங்கிற்று ஆயதே. |
கடலின்மேல் பகலவன் தன் கதிராகிய
கையை நீட்டி, உலகத்தின்
மேல் போர்த்தியுள்ள இரவின் இருளாகிய போர்வையை அழகுற
நீக்கியதுபோல், அம்மூவரும் அங்கு வந்து, அதன் அச்சம் தரும் முகத்தில்
அமைந்து கிடந்த வெப்பமாகிய துயரத்தைத் துடைத்துவிட்டமையால்,
அழகிய முகத்தோடு எழுச்சி பெற்ற அப்பாலைவனம் இலங்கித்
தோன்றியது.
| 51 |
புடம்பனைந்
திரும்புசெம் பொன்னின் றன்மையா
மிடம்புனைந் திட்டதா ரிரதத் தாலென்பார்
தடம்புனைந் திவர்வரத் தழன்ற கானலர்ப்
படம்புனைந் தெழுதிய பரப்பிற் றாயதே. |
| |
புடம் புனைந்து
இரும்பு செம் பொன்னின் தன்மை ஆம்
இடம் புனைந்து இட்டது ஓர் இரதத்தால் என்பார்;
தடம் புனைந்து இவர் வர, தழன்ற கான், அலர்ப்
படம் புனைந்து எழுதிய பரப்பிற்று ஆயதே. |
இரும்பு
புடமிடப்பட்டு, தன்மேல் பக்குவம் அறிந்து இடப்பட்ட ஓர்
இரசவாத வித்தையால் செம்பொன்னின் தன்மையை அடையுமென்று
அறிந்தோர் கூறுவர். அவ்வாறே, வெப்பத்தால் எரிந்து கொண்டிருந்த
பாலைவனமும், அவ்வழித் தடத்திற்கு அழகு தந்து இம்மூவரும் வருதலால்,
மலர்கள் அழகாக வரைந்த படம்போல மலர்ப் பரப்புடையதாய்த் தோன்றியது.
| 52 |
சொற்றிறத்
தொருகணத் துலகந் தோற்றிமுன்
பற்றிறத் தெழினலம் படைத்த பான்மையான்
முற்றிறத் தழன்றகான் மூவர் கண்டுளி
பொற்றிறத் தரிதினிற் பொறித்த தாயதே. |
| |
சொல் திறத்து
ஒரு கணத்து உலகம் தோற்றி, முன்
பல் திறத்து எழில் நலம் படைத்த பான்மையால்,
முன் திறத்து அழன்ற கான், மூவர் கண்டு உளி,
பொன் திறத்து அரிதினின் பொறித்தது ஆயதே. |
|