|
ஆண்டவன்,
'உண்டாகுக' என்று கூறிய ஒரு சொல்லின் வலிமையால்
இவ்வுலகம் ஒரு கணத்தில் தோன்றியது. அது முன்னிருந்தே பல திறப்பட்ட
அழகு நலம் படைத்து விளங்கியது. அத்தன்மையால், முன்னெல்லாம்
கடுமையாகக் கொதித்துக் கொண்டிருந்த பாலைவனம், இம்மூவரும்
பார்த்தவுடனே, பொன்னின் இயல்பாக அரிதாய் எழுதிய படம் போல்
மாறிற்று.
| 53 |
மைமறுத் தலரணி
வனங்கண் டாவெனக்
கைமறுத் ததிசயித் தலர்ந்த காந்தளைப்
பைமறுத் தவிழரா வென்று பாய்மயில்
பொய்மறுத் தினநக நாணிப் போயதே. |
| |
மை மறுத்து அலர்
அணி வனம் கண்டு, 'ஆ!' எனக்
கை மறுத்து அதிசயித்து அலர்ந்த காந்தளை,
பை மறுத்து அவிழ் அரா என்று பாய் மயில்,
பொய் மறுத்து இனம் நக, நாணிப் போயதே. |
பாலைவனம்
என்ற தனது மாசை ஒழிந்து மலர்களை அணிந்து நின்ற
அவ்வனத்தைக் கண்டு, தன் கையை விரித்து, 'ஆ' என்று வியந்து
கார்த்திகைப்பூ மலர்ந்தது. அதனை மயில் கண்டது; அது படம் விரித்து
நிமிர்ந்த பாம்பென்று கருதி அதன்மேல் பாய்ந்தது. அது பொய்யென்று
மறுத்துத் தன் இனத்து மயில்கள் நகைக்க, அம்மயில் நாணிப் போயிற்று.
கார்த்திகைப்
பூ இதழ் விரித்தால் கைவிரல்களை விரித்தாற் போன்று
தோன்றும். அதன் மொட்டு படம் விரிக்காத பாம்புத்தலை போல் இருக்கும்.
அதன் அருகே விரிந்த பூ படம் விரித்த பாம்பென்று மயங்கி மயில்
பாய்ந்தது. இப்பாடல் மயக்கவணி.
| 54 |
தோகையி
னெருத்தெனத் துணர்விள் காசைகண்
டாகையின் மயிலொளித் தாக வுட்குறீஇ
யேகையின் வண்டுகண் டிளைய முல்லைக
ளோகையி னக்கென வெயிறு டைந்தவே. |
|