பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 497

தோகையின் எருத்து எனத் துணர் விள் காசை கண்டு,
ஆகையின், மயில் ஒளித்து ஆக உட்கு உறீஇ
ஏகையின் வண்டு கண்டு, இளைய முல்லைகள்
ஓகையின் நக்கு என, எயிறு உடைந்தவே.


     கொத்தாக விரிந்த காயா மலர்களை வண்டுகள் கண்டு, மயிலின்
கழுத்து என மயங்கின. ஆகவே, மயில் இலைகளிடையே ஒளித்திருப்பதாக
அச்சமுற்று விலகிச் சென்றன. அவ்வாறு செல்லுகையில், இளைய முல்லைச்
செடிகள் அவற்றைக் கண்டு மகிழ்ச்சியால் நகைத்ததுபோல, பல்லைப்
போன்ற முல்லை அரும்புகள் மலர்ந்தன.

     காசை - காசா, இது 'காயா' என்ற சொல்லின் கடைப்போலி. நீல
நிறமுள்ள காயா மலர்க் கொத்து மயிலின் கழுத்தை ஒத்திருந்தது.

 
                       55
மிகையுடைத் தகவினார் மெலிவு கண்டுளி
பகையுடைத் தகவிலார் பரிசி னக்கதோ
நகையுடைத் துகுக்குவ மென்ன நண்ணிமென்
முகையுடைத் துதிர்த்தன மொய்த்த வண்டரோ.
 
"மிகை உடைத் தகவினார் மெலிவு தண்டு உளி,
பகை உடைத் தகவு இலார் பரிசின் நக்கதோ?
நகை உடைத்து உகுக்குவம்!" என்ன நண்ணி,
மென் முகை உடைத்து உதிர்த்தன மொய்த்த வண்டு அரோ.

     "தம்மினும் மிகுந்த சிறப்புள்ளவர்தம் மெலிவைக் கண்டவிடத்து,
அவர்மீது பகை கொண்ட சிறப்பில்லாதவர் தன்மை போல எம்மை
நோக்கிச் சிரித்த செயலோ இது? சிரித்த பல்லை "உடைத்து உதிர்ப்போம்"
என்று நெருங்கி் மொய்த்த வண்டுகள் அம்முல்லை மொட்டுகளை ஊதி
மலர்வித்துக் குடைந்து சிதறின. இப்பாடல் தற்குறிப் பேற்றவணி.

 
                     56
பைச்சுடர் மரகதப் பலகை பாய்த்திமே
லைச்சுடர் மணிப்பரப் பாகப் பைம்புன்மே
னொய்ச்சுட ரலர்த்தட நொய்தென் றேகினார்
முச்சுடர் நடந்தென நடந்த மூவரே.