பைச் சுடர் மரகதப்
பலகை பாய்த்தி, மேல்
ஐச் சுடர் மணிப் பரப்பு ஆக, பைம்புல் மேல்
நொய்ச் சுடர் அலர்த் தடம் நொய்து என்று ஏகினார்
முச்சுடர் நடந்து என நடந்த மூவரே. |
பசுமையான
ஒளியை உடையமரகதப் பலகையை அடியில் பரப்பி,
அதன்மேல் அழகிய ஒளியுள்ள மணிகளைப் பரப்பியதற்கு ஒப்பாக,
பசுமையான புல்லின்மேல் மெல்லிய ஒளியுள்ள மலர்களைக் கொண்டுள்ள
அந்த வழித் தடத்தின்மீது, ஞாயிறு, திங்கள், விண்மீன் என்ற மூன்று
சுடர்களும் இறங்கி நடந்ததுபோல் நடந்த அம்மூவரும், அப்பாதை
மென்மையானது என்று மகிழ்ந்து சென்றனர்.
புல்லுக்கு
மரகதமும், அதன் பலநிற மலர்களுக்குப் பலவகை
மாணிக்கங்களும் உவமை. பைச்சுடர் - பசுமை + சுடர், பைம்புல் - பசுமை
+ புல்.
| 57 |
உண்முழு தருள்முகத்
துகளத் தோற்றிய
விண்முழு திறைஞ்செழில் காண வேட்கையாற்
கண்முழு துடல்பெறக் கலாப மஞ்ஞைகள்
தண்முழு தலர்ந்தகான் றதும்பி யாடுமால். |
| |
உள்முழுது அருள்
முகத்து உகளத் தோற்றிய
விண்முழுது இறைஞ்சு எழில் காண வேட்கையால்,
கண்முழுது உடல் பெறக் கலாப மஞ்ஞைகள்
தண்முழுது அலர்ந்த கான் ததும்பி ஆடும் ஆல். |
அம்மூவர்தம்
உள்ளத்தில் முழுமையாக உள்ள அருள் முகத்தில்
தவழ்ந்து தோன்றியது வானுலகம் முழுவதும் வணங்கும் அத்தகைய
அழகைக் காண மயில்கள் ஆசை கொண்டன. அதற்கு இரு கண்கள்
போதுமா? எனவே, உடல் முழுவதும் கண்களைப் பெற வேண்டித் தோகை
கொண்ட அம்மயில்கள் தோகைகளை விரித்து முழுவதும் குளிர்ச்சியோடு
மலர்ந்து நின்ற அக்காட்டில் நிறைந்து நின்று ஆடும்.
இதுவும்
தற்குப்பேற்றவணி.
|