| 58 |
கற்றெனத்
தகாதுரைத் தன்பு கைக்கொளப்
பற்றெனப் பொருளினைப் பற்றும் பூரிய
ரற்றெனத் தம்பிக ளலர்க்கண் ணட்பினைச்
சொற்றெனக் கனைந்துசூழ் துணர்கு டைந்தவே. |
| |
கற்று எனத் தகாது
உரைத்து அன்பு கைக் கொள
பற்று எனப் பொருளினைப் பற்றும் பூரியர்
அற்று என, தும்பிகள் அலர்க்கண் நட்பினைச்
சொற்று எனக் கனைந்து, சூழ்துணர் குடைந்தவே. |
கற்றவர்போல்
நீசர் தம்மைக் காட்டிக் கொண்டு, செல்வர்களிடம்
அவர்கட்குத் தகாத புகழை இருப்பதாக எடுத்துரைத்து, அவர்களின்
அன்பைப் பெறுமாறு பற்றுள்ளவர்போல் காட்டிக் கொண்டு,
அவர்களிடமுள்ள பொருளைக் கவர்ந்து செல்வர். அது போலவே,
வண்டுகளும் மலர்களிடம் தமக்குள்ள நட்பை எடுத்துக் கூறுவதுபோல்
நெருங்கி, சூழவுள்ள பூங்கொத்துக்களைத் தேனுக்காகக் குடைந்தன.
| 59 |
சாற்றின
வுரைகள்பொய்த் தன்பின் றன்மையாற்
போற்றின பொருளறப் புலம்பும் புல்லர்போ
லூற்றென வடிந்ததே னுண்டு மாறலிற்
றூற்றின வருகளி துவைப்பப் போயினார். |
| |
சாற்றின உரைகள்
பொய்த்து, அன்பின் தன்மையால்
போற்றின பொருள் அறப் புலம்பும் புல்லர் போல்,
ஊற்று என வடிந்த தேன் உண்டு, மாறலின்
தூற்றின அருகு அளி துவைப்பப் போயினார். |
முன்புகழ்ந்து
சொன்ன சொற்கள் பொய்யாகுமாறு, அன்புள்ள
தன்மைபோல் காட்டிப் போற்றுவற்குக் காரணமான பொருள் அற்றுப்
போகவும் தூற்றிப் புலம்பும் அற்பர்போல், ஊற்றுப்போல் சுரந்த தேனை
மகிழ்ந்து முன் உண்டு, பின் அது இல்லாது மாறவும் தூற்றுவனபோல்
இரைந்த வண்டுகள் மொய்க்க, அப்பாதை வழியே மூவரும் நடந்து
போயினர்.
|