| 60 |
வல்லுருத்
தகவினார் கடந்த வாயெலாந்
தொல்லுருத் தகவனஞ் சுடவ ழன்றதால்
வில்லுருக் கணவனை விழித்த கண்ணினாற்
பல்லுருக் காண்டில பாவை பான்மையே. |
| |
|
வல்உருத் தகவினார்
கடந்த வாய் எலாம்
தொல் உருத் தகவனம் சுட அழன்றது ஆல்,
வில் உருக் கணவனை விழித்த கண்ணினால்
பல் உருக் காண்டு இல பாவை பான்மையே.
|
ஒளியுள்ள
உருவம் படைத்த தன் கணவனைப் பார்த்த கண்ணினால்
பிற பல மனித உருவங்களைக் காணுதல் இல்லாத கற்புள்ள பெண்ணின்
தன்மைபோல், வல்லபத்தாலும், உருவத்தாலும் சிறந்த அம்மூவரும் கடந்து
சென்றுவிட்டபின் அவ்விடமெல்லாம் தம் பழைய உருவத்தோடு
விளங்கியதனால் அப்பாலைவனம் சுடுவதாகக் கொதித்தது.
வருங்காலத்
தவமுனிவோர்
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
| 61 |
நண்பக மலர்ந்த
மூவர்
நடுவனஞ் சென்றோர் நாளி
லொண்பக னெற்றி போகி
லுயர்திட ரகட்டில் வேய்ந்த
சண்பக நிழலின் வைகித்
தரணியா ளிளவ னல்யாழ்
பண்பக லுரைகொண் டம்பூப்
பதுமவாய் மலர்ந்து சொன்னான். |
| |
|
நண்பு அகம்
மலர்ந்த மூவர் நடு வனம் சென்று, ஓர் நாளில்
ஒண் பகல் நெற்றி போகில், உயர் திடர் அகட்டில் வேய்ந்த
சண்பக நிழலின் வைகி, தரணி ஆள் இளவல் நல் யாழ்
பண்பு அகல் உரை கொண்டு, அம் பூப் பதும் வாய் மலர்ந்து சொன்னான்.
|
|