|
உள்ளத்து
அன்பு மலர்ந்த அம்மூவரும் நடுப் பாலைவனத்தில்
சென்று கொண்டிருந்தனர். ஒரு நாள், ஒளி பொருந்திய பகலவன் வானத்து
உச்சி சேர்ந்த நடுப்பகல் வேளையில், உயர்ந்த மேட்டின் நடுவில்
கிளைகளைப் பரப்பி நின்ற சண்பக மரத்து நிழலில் இளைப்பாறத் தங்கினர்.
அப்பொழுது, இவ்வுலகத்தை ஆளும் சிறுவனாகிய திருமகன் நல்ல யாழின்
பண்பை வென்று அகற்றும் உரை கொண்டு, அழகிய தாமரை மலர் போன்ற
வாயைத் திறந்து பின் வருமாறு சொல்லலானாள் :
திடர்
- திடல் என்பதின் கடைப்போலி.
| 62 |
"நேரலர்
மறுத்துச் செந்தீ
நிறைகினும் பலகால் வைகி
நேரலர் வனத்தி னாமே
நிகழ்ந்தடி வைத்த பாலா
னேரலர் நேரு நேரா
நீணிதி துஞ்சுங் கோயி
னேரல ரிக்கான் றுஞ்சு
நெடுந்தவத் தறங்க டாமே. |
| |
நேர் அலர் மறுத்துச்
செந்தீ நிறைகினும், பல கால் வைகி,
நேர் அலர் வனத்தில் நாமே நிகழ்ந்து அடி வைத்த பாலால்,
நேரலர் நேரும் நேரா நீள் நிதி துஞ்சும் கோயில்
நேர் அலர் இக் கான், துஞ்சும் நெடுந் தவத்து அறங்கள் தாமே. |
"மலர்ந்து
நீண்டு கிடக்கின்ற இவ்வனத்தில் இந்நிகழ் காலத்தில்
நாமெல்லாம் அடி வைத்து நடந்த தன்மையால், பகைவர் பணிந்து
கொடுக்கும் நிகரற்ற நெடிய செல்வம் உறங்கிக் கிடக்கும் அரச மாளிகை
போன்று இப்பாலைவனம் மலர்ந்து கிடக்கும். பல காலம் கடந்த பின்
நமக்கு நேர்ந்து தந்த மலரைத் தர மறுத்துச் செந்தீயே நிறைந்து
கிடப்பினும், நெடிய தவத்தினால் விளையும் புண்ணியங்கள் உறங்கிக்
கிடக்கும் இடமாக இது அமையும்.
'நேர்'
என்ற சொல் பல பொருளில் வந்துள்ள நயம் காண்க: நேர்ந்த,
நீண்டு, உடன்பாடு, போல.
|