"கா உளன் ஆகி,
என் மேல் கருத்தில் வான் குடியன்; வேத
நா உளன்; தவத்தின் வாய்ந்த நவ்வு உளன்; வினை நீர் நீந்தி
மேவு உளன் வளர்ந்து, எந்நாளும் வேண்டும் ஊண் காகம் உய்ப்ப,
பாவுளன் என்பான் நீடப் பறம்பு அடி முழையுள் வாழ்வான். |
பாவுளன்
என்னும் ஒரு முனிவன் இப் பாலைவனத்து இருப்பவனாகி,
என் மேல் வைத்த கருத்தினால் வானகத்துக் குடியாயிருப்பவன் போலவே
ஆவான். வேதம் ஓதும் நாவை உடையவன்; தவம் எனும் சிறந்த மரக்கலத்து
ஏறியவன்; தீவினை என்னும் கடலை நீந்தி புண்ணியம் மேவும் உள்ளம்
உடையவனாய் வளர்ந்து, எந் நாளும் தனக்கு வேண்டிய உணவைக் காகமே
கொண்டு வந்து கொடுக்க, நெடுங்காலமாய் மலையின் அடியிலுள்ள ஒரு
குகைக்குள் வாழ்வான்.
பாவுளன்
- பவுல்; வனத்துச் சின்னப்பர்.
| 65 |
இவாவிய லடியி
னீழ
லெனவடுங் கசடு நீங்கா
வவாவியல் பரிந்த தன்மைத்
தமரரொத் தெனக்க டாம்பெய்
யுவாவியல் முதற்பன் மாவு
முவந்தவற் கேவல் செய்யத்
தவாவியல் முனிவர்க் கெல்லாந்
தலைவனென் றொளிமிக் காவான். |
| |
"இவாவு
இயல் அடியின் நீழல் என அடும் கசடு நீங்கா
அவா இயல் பரிந்த தன்மைத்து அமரர் ஒத்து என, கடாம் பெய்
உவா இயல் முதல் பல் மாவும் உவந்து அவற்கு ஏவல் செய்ய,
தவா இயல் முனிவர்க்கு எல்லாம் தலைவன் என்று, ஒளி மிக்கு, ஆவான்.
|
தொடர்ந்து
செல்லும் தன்மையுள்ள தன் அடியின் நிழல் போல்
தன்னை விடாது வருத்தும் மன மாசு நீங்காமைக்குக் காரணமான ஆசையை
அறுத்தெறிந்த தன்மையால், அப்பரவுளன் வானவர்க்கு நிகரானவன் போல்
|