|
விளங்குவான். மதம்
பொழியும் இயல்புள்ள ஆண் யானை முதல் பல
விலங்குகளும் மகிழ்ந்து அவனுக்கு ஏவல் செய்யும். அவன் தவத்தினால்
ஒளி மிகுந்து, கெடாத நல்லியல்பு வாய்ந்த முனிவர்க்கெல்லாம்
தலைவனென்று அமைவான்.
நீழல்
- நிழல் என்பதன் நீட்டல் விகாரம். கடாம் பெய் உவா இயல்
- கடாம் பெய் இயல் உவா என மாற்றிக் கூட்டுக.
| 66 |
வேளரி தமர்போர்
வென்று
வியன்றகா
னெய்திப் பேய்கள்
கோளரி யுழுவை மற்றக்
கொடியமா
வுருவிற் றோன்ற
நீளரி துயுத்தத் தெஞ்சா
நெடியவம்
மலைக்கண் ணோன்பின்
வாளரி தேந்தி வெல்வான்
வரங்கொளந்
தோனி யென்பான். |
| |
'வேள் அரிது
அமர் போர் வென்று, வியன்ற கான் எய்தி, பேய்கள்
கோள் அரி உழுவை மற்றக் கொடிய மா உருவில் தோன்ற
நீள் அரிது யுத்தத்து எஞ்சா, நெடிய அம்மலைக்கண் நோன்பின்
வாள் அரிது ஏந்தி வெல்வான் வரம் கொள் அந்தோனி என்பான். |
"கடவுளின்
வரம் கொண்ட அந்தோணி எனப்படும் முனிவன் நாட்டில்
இருக்கும்போதே மன்மதன் செய்யும் நீடித்த காமப் போரை அரிய
முறையிலே வெல்வான்; பின் பரந்த காட்டை அடைவான். அங்குப் பேய்கள்
வலிமையுள்ள சிங்கம் புலி மற்றக் கொடிய விலங்குகளின் உருவத்தில்
தோன்றிப் போர் தொடுக்கும். நீண்டதும் வெல்வதற்கு அரியதுமான
அப்போரில் அவன் மெலியாமல், நெடிய அம்மலையில் தவம் என்னும்
வாளை அரிய முறையில் ஏந்தி நின்று வெல்வான்.
அந்தோனி
- வனத்து அந்தோனியார்.
|