| 67 |
நீரின்பா
லிரவி மூழ்கி
நினைத்ததோர்
தியானம் விள்ளா
தேரின்பா லிரவி மீண்டுந்
தீர்கில
னுணர்ந்த காட்சி
காரின்பா லுயர்ந்த வீட்டிற்
கனிந்துறை
காட்சி யொப்பப்
பாரின்பால் வரைமு கட்டோர்
படர்விளக்
காக நிற்பான். |
| |
'நீரின்பால்
இரவி மூழ்கி நினைத்தது ஓர் தியானம் விள்ளா
'தேரின்பால் இரவி மீண்டும் தீர்கிலன் உணர்ந்த காட்சி
காரின்பால் உயர்ந்த வீட்டில் கனிந்து உறை காட்சி ஒப்ப,
பாரின்பால் வரை முகட்டு ஓர் படர் விளக்கு ஆக நிற்பான்' |
"அவன்
கடலில் கதிரவன் மூழ்கும்போது நினைவிற் கொண்ட ஒரு
தியானத்தை இரவு முழுவதும் விடாமல், காலையில் தன் தேரின் மீது
கதிரவன் மீண்டு வந்து தோன்றிய பின்னரும் தீராது கொண்டிருப்பான்.
அத்தியானத்தில் தான் உணர்ந்த தெய்வக் காட்சி மேகத்தின் மேலும்
உயர்ந்த மோட்சத்தில் மகிழ்ந்து தங்கும் காட்சிக்கு ஒப்பாக இருக்கும.்
அவன் தன் தவ மேம்பாட்டால் இவ்வுலகில் மலையின் உச்சியில் ஒளி
பரப்பும் ஒரு விளக்குப்போல் நிற்பான்.
| 68 |
மீயிர வரசற்
சூழ்ந்த
மீனென
முனிவ ரோர்மூ
வாயிரர் தொடர நெஞ்சத்
தவாவறத்
தனித்து நிற்பப்
பாயிர வுரையின் னாதற்
பார்த்தவ
ணிலரி யோனே
தேயிர வரசின் வெற்றிச்
சிலையினாண்
முறுக்கிற் போல்வான். |
| |
'மீ இரவு அரசற்
சூழ்ந்த மீன் என, முனிவர் ஓர் மூ -
வாயிரர் தொடர, நெஞ்சத்து அவா அறத் தனித்து நிற்ப.
பாயிர உரையின். நாதற் பார்த்து அவண் இலரியோனே
தேய் இரவு அரசின் வெற்றிச் சிலையின் நாண் முறுக்கின் போல்வான். |
|