| 70 |
உறப்பகை
நுழைவா யென்றைந்
துட்பகை
தவமே காக்கப்
புறப்பகைப் பகழி தாங்கும்
பொற்பர
மாகச் சீலம்
பெறப்பகை செருக்கும் வைவாட்
பெற்றியின்
விரத மோச்சி
யறப்பகை வெறியை வென்றாங்
கயோதர
னெடிது நோற்பான் |
| |
"உறப்பகை நுழைவாய்
என்று ஐந்து உட்பகை தவமே காக்க,
புறப்பகைப் பகழி தாங்கும் பொற் பரமாகச் சீலம்
பெற, பகை செருக்கும் வைவாட் பெற்றியின் விரதம் ஓச்சி,
அறப்பகை வெறியை வென்று ஆங்கு அயோதரன் நெடிது நோற்பான். |
"பகையெல்லாம்
பொருந்த நுழையும் வாயில் என்று உட்பகையாகிய
ஐம்புலன்களையும் தவத்தினால் அடக்கிக் காத்தும், உலகமென்னும்
புறப்பகையாகிய அம்பைத் தடுக்கும் பொற்கவசமாக ஒழுக்கத்தை
கொண்டிருந்தும், எல்லா வகைப் பகைகளையும் அழிக்கும் கூர்மையான
வாளின் தன்மையாக விரதத்தைக் கொண்டு ஒட்டியும், அறத்திற்கெல்லாம்
பகையாகிய பேயை வென்று, அயோதரன் என்னும் முனிவன் அங்கு
நெடுங்காலம் தவஞ் செய்வான்.
| 71 |
அவாவென மதத்தின்
சீற்றத்
தறிவெனப்
பாகன் வீழ்த்த
வுவாவென வுடலைக் கைக்கொண்
டூக்கநற்
றோட்டி மாற்றி
யிவாவன தவக்க வட்டை
யிட்டிறா
விரதத் தூணின்
மவாவன முனிவன் சேர்த்தி
வானமும்
வியப்பச் செய்வான். |
|