"அவா என மதத்தின்
சீற்றத்து அறிவு என் எப் பாகன் வீழ்த்த,
உவா என உடலைக் கைக்கொண்டு, ஊக்க நல் தோட்டி மாற்றி,
இவா அன தவக் கவட்டை இட்டு இறா விரதத் தூணின்
மவாவன முனிவன் சேர்த்தி வானமும் வியப்பச் செய்வான் |
"ஆசை
என்னும் மதத்தின் சீற்றத்தால் அறிவு என்னும் அப்பாகனை
வீழ்த்தவே, தன் உடலை யானை என்று கருதிக் கைக் கொண்டு, ஊக்கம்
என்னும் நல்ல அங்குசத்தால் அம்மதத்தை மாற்றி, குறையாத தன்மை
பொருந்திய தவமாகிய கழுத்துக் கயிற்றை இட்டு, ஒடியாத விரதம் என்னும்
தூணோடு சேர்த்துக் கட்டி, வானுலகமும் வியக்குமாறு மவாவன முனிவன்
தவஞ் செய்வான்.
| 72 |
வீட்டரு நாட்டிற்
கேற்ற
விழுப்பொரு
ளாக நாடி
யீட்டருஞ் சீலக் குப்பை
யேற்றிநல்
லுயிரோ டாக்கை
பூட்டரு மேராய்ப் பூட்டிப்
புரைநசைக்
சேற்றுட் செல்லா
வாட்டருந் தவத்தின் பண்டி
மதித்தகன்
கதியிற் சேர்ப்பான். |
| |
"வீட்டு அரு நாட்டிற்கு
ஏற்ற விழுப் பொருளாக நாடி,
ஈட்டு அருஞ் சீலக் குப்பை ஏற்றி, நல் உயிரோடு ஆக்கை
பூட்டு அரும் ஈராய்ப் பூட்டி, புரை நசைச் சேற்றுள் செல்லா,
வாட்டு அருந் தவத்தின் பண்டி மதித்தகன் கதியில் சேர்ப்பான். |
"மோட்ச
வீடு என்னும் அரிய நாட்டிற்கு ஏற்ற சிறந்த பொருளாகத்
தேர்ந்தெடுத்து, சம்பாதித்த அரிய புண்ணியக் குவியலைப் பாரமாக ஏற்றி,
நல்ல உயிரோடு உடலையும் பூட்டுவதற்கு அரிய இணை மாடுகளாகப் பூட்டி,
பாவத்திற்குக் காரணமான ஆசை என்னும் சேற்றினுள்ளே செல்லாதவாறு
காத்து உடலை வாட்டிச் செய்யும் அரிய தவமாகிய வண்டியை மதித்தகன்
என்னும் முனிவன் வான் கதியிற் கொண்டு போய்ச் சேர்ப்பான்.
|