பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 510

     "தான் செய்த தவமாகிய செந்தீயில் ஐம்பொறியாகிய இரும்பைப்
போட்டு ஊதி, தன்னுள் ஏற்றிய தெளிந்த ஞனமாகிய இரசவாதம் இட்டு,
அதனாற் கிடைத்த பசும் பொன்னை உருக்கி எடுத்து, தெளிந்த வேதத்தை
அச்சாகக் கொண்டு வார்த்து, ஒழுக்கமாகிய நல்ல மணிகளை அதனில்
பதித்து, இவ்வாறாகப் புரோதரன் என்னும் முனிவன் தான் வணங்கிய
ஆண்டவனது மார்பில் அழகிய அணிகலனாக விளங்குவான்.

 
          75
மீனென விளங்கித் துஞ்சு
     மின்னென வாழ்க்கை நோக்கி
யானென தென்னும் பற்ற
     வியாவுமற் றெண்ணொன் றின்றி
வானென விளங்க விக்கான்
     வருந்தியென் னடியை வைத்தே
னானென வுணர்ந்து மொய்ப்பார்
     நற்றவத் துயர்ந்த நீரார்.
 
"மீன் என விளங்கி, துஞ்சும் மின் என வாழ்க்கை நோக்கி,
யான் எனது என்னும் பற்றல் யாவும் அற்று, எண் ஒன்று இன்றி,
வான் என விளங்க இக்கான் வருந்தி என் அடியை வைத்தேன்
நான் என உணர்ந்து, மொய்ப்பார் நல் தவத்து உயர்ந்த நீரார்.

     "விண்மீன் போலச் சிறிது காலம் விளங்கி, பின் மின்னல் போல்
திடீரென மாயும் வாழ்க்கையின் நிலையாமையை நோக்கி, நான் எனது
என்னும் பற்றுக்கள் யாவும் அறுத்து, இப்பாலைவனம் வானுலகம்போல்
விளங்குமாறு நானே வருந்தி அதன்மீ்து என் அடி வைத்து நடந்தேன்
என்று உணர்ந்து, நல்ல தவத்தால் உயர்ந்த தன்மையுள்ளோர் ஓர்
எண்ணிக்கையின்றி வந்து மொய்ப்பர்.

 
            76
போர்பொருள் பலவு நாடிப்
     போத லாண் டொழிலாய்ப் போகி
லேர்பொரு ணாண நாடில்
     லிருத்தல் பெண் டொழில தாகித்