பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 511

தேர்பொரு ளறங்க ணாடிச்
     செய்தவாண் டுறவி னூங்கும்
பேர்பொருள் வாழ்க்கை நாடாப்
     பெண்டுற வரிய தன்றோ.
 
'பேர் பொருள் பலவும் நாடிப் போதல் ஆண் தொழிலாய், போகில்
ஏர் பொருள் நாணம் நாடு இல் இருத்தல் பெண் தொழில் அது ஆகி,
தேர் பொருள் அறங்கள் நாடிச் செய்த ஆண் துறவின் ஊங்கும்,
பேர் பொருள் வாழ்க்கை நாடாப் பெண் துறவு அரியது அன்றோ?

     "போர் செய்தலையும் பொருள் தேடுதலையும் பிற பல
காரியங்களையும் நாடி வீட்டை விட்டு போதல் ஆண் மகனுக்குரிய
தொழிலாய் அமையும். அவன் அவ்வாறு போகுங்கால், தன் இனத்துக்கு
அழகுப் பொருளாகிய நாணத்தை நாடும் தன்மையாய் வீட்டில் இருத்தல்
பெண் மகளின் தொழிலாய் அமையும். எனவே, தான் தேர்ந்து கொண்ட
சிறப்புப் பொருளாகிய புண்ணியங்களை நாடிச் செய்த ஆண் துறவைக்
காட்டிலும், பேரும் பொருளுமாய் அமைந்த இல் வாழ்க்கையை நாடாத
பெண்ணின் துறவு அரியதே அன்றோ.

 
             77
தீயவு நலமு முள்ளிற்
     றேறிய பெண்ணிற் றேற
லாயவு மரிதே முன்ன
     ரழிந்தநாண் வேலி தாவி
யேயவுங் காமத் தாழ்ந்த
     வெசிசிய மரியாள் பின்னர்
தூயவு மரிதி லோர்ந்து
     துறந்திவ ணெடுநா ணிற்பாள்.
 
"தீயவும் நலமும் உள்ளின், தேறிய பெண்ணின் தேறல்
ஆயவும் அரிதே முன்னர், அழிந்த நாண் வேலி தாவி,
ஏயவும் காமத்து ஆழ்ந்த எசிசிய மரியாள், பின்னர்,
தூயவும் அரிதில் ஓர்ந்து, துறந்து இவண் நெடு நாள் நிற்பாள்