|
"தீயவற்றையோ
நல்லவற்றையோ கருதினால், துணிவாய் ஈடுபடுகின்ற
பெண்ணைப் போலத் துணிதல் என்பது ஆராய்ச்சிக்கு எட்டவும்
அரியதாகும். வாழ்க்கையின் முற்பகுதியில், அழிந்து கிடந்த நாணமாகிய
வேலியைத் தாண்டி, மிகுதியாகக் காமத்தில் ஆழ்ந்து கிடந்த எசித்து நாட்டு
மரியாள் என்பவள், பிற்பகுதியில், தூயவற்றையும் அரிதாக உணர்ந்து, துறவு
பூண்டு இங்கே நெடு நாள் தவத்தில் நிலைபெறுவாள்.
| 78 |
கண்மையின்
மற்றி யாருங்
கண்டதன்
பிழைகாண் பாரார்
நுண்மையி னுற்ற பாவ
நுதலியிட்
டானே கண்ட
வுண்மையி னுணர்ந்த வூக்க
முளத்திற
காக வெய்திப்
பெண்மையின் போர்வை நாணம்
பிரிவிலள்
போர்த்து நிற்பாள். |
| |
"கண் மையின்,
மற்று யாரும் கண்ட தன் பிழை காண்பார் ஆர்?
நுண்மையின் உற்ற பாவம் நுதலி உள் தானே கண்ட
உண்மையின் உணர்ந்த ஊக்கம் உளத்து இறகாக எய்தி,
பெண்மையின் போர்வை நாணம் பிரிவு இலள் போர்த்து நிற்பாள். |
"கண்ணில்
தீட்டிய மையைப் பிறர் காணக் கண் காணாதது போல,
வேறு யாவரும் தன்னிடம் கண்ட பிழையைத் தானாகக் கண்டு கொள்பவர்
யார்? அவளோ தான் கொண்ட பாவங்களைத் தானாகவே நுணுக்கமாக
உள்ளே புகுந்து ஆராய்ந்து தானே காண்பாள்; உண்மையை உள்ளவாறு
உணர்ந்ததனால் அதினின்று விடுபட ஊக்கம் பிறக்கும். அதனையே
இறகாகக் கொண்டு, வீட்டினின்று காட்டிற்குப் பறந்து வருவாள்; அதன்மேல்,
பெண்மையின் போர்வையாகிய நாணத்தை விலகாமல் போர்த்துக் கொண்டு
தவத்தில் நிற்பாள்.
"எழுதுங்கால்
கோல் காணாக் கண்ணேபோல்..." என்ற குறள் (1285)
கருத்து ஒலித்தல் காண்க.
|