| 79 |
காமமே பறவைத்
தேர்மேற்
கசடெனும்
பாலை சேர்ந்தாள்
வீமமே பறவைத் தேர்மேல்
விளைதவக்
குறிஞ்சி ஞான
வாமமே பறவைத் தேர்மேல்
வளர்அற
முல்லை சேர்ந்தென்
னாமமே பறவைத் தேர்மே
ணயப்பவா
னாட்டைச் சேர்வாள். |
| |
"காமமே பறவைத்
தேர் மேல் கசடு எனும் பாலை சேர்ந்தாள்,
வீமமே பறவைத் தேர் மேல் விளை தவக் குறிஞ்சி, ஞான
வாமமே பறவைத் தேர்மேல் வளர் அற முல்லை சேர்ந்து, என்
நாமமே பறவைத் தேர் மேல் நயப்ப வான் நாட்டைச் சேர்வாள். |
"முன்
காமம் என்னும் பறக்கும் தேர் மேல் ஏறிப் பாவம் என்னும்
பாலை நிலத்தைச் சேர்ந்திருந்த அம்மரியாள், பின் தெய்வ பயம் என்னும்
பறக்கும் தேர்மேல் ஏறி விளைந்த தவமாகிய குறிஞ்சி நிலத்தையும்,
அதன்பின் தெய்வ ஞான ஒளி என்னும் பறக்கும் தேர் மேல் ஏறி வளர்த்த
புண்ணியமாகிய முல்லை நிலத்தையும் சேர்ந்து, முடிவில் என் பெயர்
என்னும் பறக்கும் தேர் மேல் ஆசையோடு வானுலகமாகிய மருத நிலத்தைச்
சேர்வாள்.
காடு
முல்லை நிலமாகவும் நாடு மருத நிலமாகவும் கொள்ளப்படுதல்
மரபு.
| 80 |
இனைவரும்
பலரு மெண்ணி
லீட்டமும்
வேறு மாகி
நனைவரும் பொழிலி னிற்பார்
நயப்
பொடு நெடுங்கா நெஞ்சா
கனைவருந் திரண்ட தீயிற்
கனன்றகா
னோற்றீங் கென்னை
யனைவரும் புகழு மோதை
யலையுநீன்
முகிலு மாற்றா |
|